விபத்தில் சிக்கி மருத்துவமனையில் பார்த்திபன்!… கண் முழிக்கும்போதெல்லாம் கை கொடுத்த மூத்த நடிகர்…

Published on: December 27, 2022
Parthiban
---Advertisement---

எதை யோசித்தாலும் வித்தியாசமாக யோசிப்பவர் பார்த்திபன். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் விதத்தில் தனித்துவத்தை காட்டுவார். அந்த அளவுக்கு தனித்துவமாகவே திகழ்ந்து வருபவர் இவர்.

பார்த்திபன், தொடக்கத்தில் “ராணுவ வீரன்”, “அன்புள்ள ரஜினிகாந்த்”, “தாவணிக் கனவுகள்”, போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் பிரபல இயக்குனர் பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

Parthiban
Parthiban

இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு “புதிய பாதை” என்ற திரைப்படத்தை நடித்து இயக்கினார். இத்திரைப்படம் ஒரு தேசிய விருதையும், இரண்டு மாநில விருதுகளையும் பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து “பொண்டாட்டித் தேவை”, “சுகமான சுமைகள்”, “உள்ளே வெளியே” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.

சமீபத்தில் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான “ஒத்த செருப்பு”, “இரவின் நிழல்” போன்ற திரைப்படங்கள் மிகவும் எக்ஸ்பிரிமென்டலான படைப்புகளாக அமைந்தது. “ஒத்த செருப்பு” திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார். “இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் “புதிய பாதை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து குறித்தும் அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்த அந்த மூத்த நடிகரை குறித்தும் இப்போது பார்க்கலாம்.

Puthiya Pathai
Puthiya Pathai

“புதிய பாதை” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராவிதமாக பார்த்திபனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாம். சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்த்திபனை, தனது உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் பல முறை வந்து பார்த்தாராம் நடிகை சீதா.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்த்திபனை, மூத்த நடிகரான வி.கே.ராமசாமிதான் அதிக முறை பார்க்க வந்தாராம். கிட்டத்தட்ட 12 முறையாவது பார்த்திபனை பார்ப்பதற்காக வந்திருப்பாராம் வி.கே.ராமசாமி.

இதையும் படிங்க: கோடி ரூபாய் வசூல் ஆன தமிழின் முதல் படம்… அப்போவே இவ்வளவு கலெக்சனா?? அடேங்கப்பா!!

VK Ramasamy
VK Ramasamy

“மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது எப்போது நான் கண்களை திறந்தாலும் அப்போதெல்லாம் என் கையை பிடித்தபடி நின்றுகொண்டிருப்பார் வி.கே.ராமசாமி. அவரது நடிப்பாற்றலை கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். அதை தாண்டி அவரிடம் ஒரு மனிதநேயம் இருப்பதாக அந்த சம்பவத்தின்போதுதான் நான் தெரிந்துகொண்டேன்” என ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டிருந்தாராம் பார்த்திபன். இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.