ஆயிரம் பேர் முன்னாடி இருந்தும் கோவணத்தை கட்டிக்கொண்டு திரிந்த கமல்ஹாசன்… ஆண்டவர்ன்னா சும்மாவா!!

Published on: December 29, 2022
Kamal Haasan
---Advertisement---

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர் சினிமாவின் மீது வைத்திருக்கும் வெறி குறித்தும் சினிமா ரசிகர்கள் நன்றாகவே அறிவார்கள். சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக நடிப்பிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். இந்த நிலையில் பல ஆயிரம் பேருக்கு முன்பு உடம்பில் ஆடையின்றி வெறும் கோவணத்தோடு நடித்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

16 Vayathinile
16 Vayathinile

1977 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “16 வயதினிலே”. இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் இதுதான். இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் கமல்ஹாசனின் அர்ப்பணிப்பு குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதாவது “16 வயதினிலே திரைப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்திருந்த சப்பாணி கதாப்பாத்திரம், எப்படிப்பட்ட பாத்திரம் என்பதை நாம் அறிந்திருப்போம். அந்த காலகட்டத்தில் பேண்ட் ஷர்ட் அணிந்துகொண்டு ஸ்டைலாக பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டே ஃபிளாப் படங்களாக நடிப்பதற்கு இதுதான் காரணமா?? பாவத்த!!

16 Vayathinile
16 Vayathinile

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கே ஒரு துணிவு வேண்டும். அப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்பதை தெரிந்தவுடன் அவரை கிண்டல் செய்யாத நபர்களே யாரும் இல்லை என கூறலாம். ஆனால் அதை எல்லாம் தாண்டி மிகச்சிறப்பாக அந்த கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனால் நடிக்கமுடிந்தது என்றால், அதற்கு முக்கிய காரணம் நடிப்பின் மீதான அர்ப்பணிப்பு” என கூறும் சித்ரா லட்சுமணன்,

“16 வயதினிலே திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த இடத்தில் எக்கச்சக்கமான கூட்டம் அங்கே இருந்தது. ஆனால் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று எந்த அச்சமும் படாமல் ஒற்றை கோவணத்தோடு ஒரு காட்சியில் அவர் நடித்தார். அவர் அப்படி நடித்ததற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.