Cinema History
வெறும் உள்ளாடையுடன் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்!.. காரணமாக இருந்த இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன் பணியை சிறப்பாக பணியாற்றியவர் நடிகர் எம்.என். நம்பியார். எத்தனையோ வில்லன் நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் நம்பியார் போன்ற ஒரு வில்லன் நடிகரை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பார்த்திருக்க முடியாது.
நடிப்பில் கூடவே தன் முகபாவனையை மாற்றும் விதம் கண் விழியை உருட்டும் விதம் காண்போரை வியப்படைய செய்யும். ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் மக்கள் இவரை வில்லனாகவே பார்க்க ஆசைப்பட்டனர். மேலும் ஒரு ஹீரோவுக்கு இணையாக பேசப்பட்ட வில்லன் நடிகர் யாரென்றால் நம்பியார் தான்.
இதையும் படிங்க : கமல்-ரஜினி ஆகியோரின் பட வாய்ப்புகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு போன விஜயகாந்த்… கேப்டன்னா சும்மாவா!!
திரைவாழ்க்கையில் எவ்ளோ கஷ்டத்தை குடுத்தாலும் நிஜவாழ்க்கையில் யாருக்கும் ஒரு துளி கெடுதல் நினைக்காதவர் தான் நம்பியார். அதுமட்டுமில்லாமல் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத உன்னத நடிகராக விளங்கினார் நம்பியார். இவரின் முக்கியத்துவத்தை அறியும் படங்களாக எங்கள் வீட்டு பிள்ளை, தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்களை குறிப்பிடலாம்.
பெரும்பாலும் எம்ஜிஆருக்கு ஏற்ற வில்லன் நடிகராக போற்றப்பட்டார். எம்ஜிஆரின் அனைத்து படங்களிலும் நம்பியார்தான் வில்லனாக நடித்திருப்பார். அதற்கு ஏற்றாற் போல இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். படப்பிடிப்பு சமயத்தில் யாரையும் துன்புறுத்தாத மகத்தான நடிகராகவே வாழ்ந்திருக்கிறார்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பெண்ணரசி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் நம்பியாரை அழைப்பதற்காக ஒரு உதவி இயக்குனர் என்.எஸ். ராஜேந்திரன் என்பவர் சென்றிருக்கிறார். உடைமாற்றும் அறையில் நம்பியார் ஜட்டியுடன் பேண்டை போடப் போகும் போது ‘சார் ஷாட் ரெடி, வரச் சொன்னார்கள்’ என்று அந்த உதவி இயக்குனர் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஓகே சொன்ன தல தளபதி!. அந்த கதையை மட்டும் எடுத்திருந்தா!.. மிஸ் பண்ண வெங்கட் பிரபு…
அதற்கு நம்பியார் ஷார்ட் ரெடியா? என கேட்க ஆம் என சொல்ல, வரச்சொன்னார்களா? என்று மறுபடியும் கேட்க அதற்கும் அந்த இயக்குனர் ஆம் என சொல்ல பேண்டை அப்படியே போட்டுவிட்டு வெறும் ஜட்டியுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாராம்.
அவரை பார்த்த அனைவரும் ஏன் இப்படி? எனக் கேட்க அதற்கு நம்பியார் நீங்கள்தான் ஷார்ட் ரெடி, வரச்சொல் என்று சொன்னீர்கள் என்று அந்த இயக்குனர் சொன்னார். அதான் வந்தேன் என்று கூற அதன் பிறகே நம்பியார் போய் பேண்ட் அணிந்து வந்தாராம். இதை பார்த்த அந்த உதவி இயக்குனருக்கு தான் ஏதோ தவறுதலாக சொல்லி அழைத்துவிட்டோமோ என்று குழம்பி போக நம்பியார் அவரை பார்த்து இதெல்லாம் சும்மா? என்று நகைச்சுவையாக சொல்லி தோளை தட்டிக் கொடுத்தாராம். இந்த தகவலை அந்த உதவி இயக்குனர் என்.எஸ். ராஜேந்திரன் கூறினார்.