Connect with us
Kamal, Vijayakanth, Rajinikanth

Cinema News

கமல்-ரஜினி ஆகியோரின் பட வாய்ப்புகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு போன விஜயகாந்த்… கேப்டன்னா சும்மாவா!!

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றி கொடிகள் ஒய்யாரமாக பறந்துகொண்டிருந்த சமயத்தில், ஒரு பக்கம் மிகவும் சைலன்ட்டாக விஜயகாந்த்தின் கொடியும் பறந்துகொண்டிருந்தது. ரஜினி, கமல், ராமராஜன் ஆகிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் விஜயகாந்த்தும் அவர்களுக்கு போட்டியாகவே வளர்ந்து வந்தார்.

Vijayakanth

Vijayakanth

விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அத்திரைப்படத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்திருந்தார். அதுதான் அவர் வில்லனாக நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படமாகும். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக திகழ்ந்து வந்தார்.

குறிப்பாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள கிராமங்களில் எல்லாம் விஜயகாந்த்திற்கு ரசிகர்கள் பெருகத்தொடங்கினார்கள். அதன் பின் ரசிகர்களின் கேப்டனாக உருவானார் விஜயகாந்த்.

Rajinikanth and Vijayakanth

Rajinikanth and Vijayakanth

விஜயகாந்த்தின் பெருந்தன்மையையும் உதவும் மனப்பான்மையையும் குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக திகழ்ந்தவர் விஜயகாந்த். மேலும் சக நடிகர்களை மதிப்பவராகவும், சிறந்த பண்பாளராகவும் திகழ்ந்தவர்.

இது போன்ற மனம் கொண்டவராதலால்தான் விஜயகாந்த்தை தமிழக மக்கள் எதிர்கட்சித் தலைவராக அமரவைத்தார்கள். இவ்வாறு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த விஜயகாந்த் குறித்து கமல்ஹாசன் ஒரு சுவாரஸ்யமான தகவலை தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ஜோடி சாவித்திரியா?? “சத்தியமா எங்களால பார்க்கமுடியாது”… வெறுப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்…

Vijayakanth, KamalHaasan, Rajinikanth

Vijayakanth, KamalHaasan, Rajinikanth

அதாவது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பு தேடி செல்வார்களாம். ஆனால் அவர்கள் அங்கே போவதற்கு முன்பே அங்கு விஜயகாந்த் வாய்ப்புக்கேட்டு உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு பல தயாரிப்பு நிறுவனங்களில் இவர்களுக்கு முன்பே விஜயகாந்த் அங்கு சென்று வாய்ப்பு கேட்டுக்கொண்டிருப்பாராம். “அந்த ஆர்வமும் உழைப்பும்தான் விஜயகாந்த்தை இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கிறது” என அப்பேட்டியில் கூறியிருந்தாராம் கமல்ஹாசன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top