Cinema History
எம்ஜிஆருக்கு தெரியாமல் ஸ்ரீதர் செய்த வேலை.. கண்டுபிடித்த மக்கள் திலகத்தின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?…
சினிமாவை பொறுத்தவரை சில கூட்டணிகள் செட் ஆகி பல வருடங்கள் தொடரும். ஒரு நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என ஒரு கூட்டணி, ஒரு நடிகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என ஒரு கூட்டணி என சினிமாவில் பல உதாரணங்கள் உண்டு.
அதேநேரம், கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி பிரிந்துவிடும் சம்பவங்களும் சினிமாவில் அதிகம் நடக்கும். எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை பாடிய சவுந்தர ராஜனை ஒரு கட்டத்தில் ஒதுக்க துவங்கி எஸ்.பி.பி மற்றும் யேசுதாஸ் என புதிய பாடகர்களை தனக்கு பாட வைத்தார் எம்.ஜி.ஆர். அதேபோல் வெற்றிகரமாக இருந்த பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி கூட ஒரு கட்டத்தில் பிரிந்துபோனது.
எம்.ஜி.ஆருக்கு ஆயிரக்காணக்கான பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். ஒரு கட்டத்தில் இருவரும் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கொண்டிருந்த நேரம் அது. அப்போது எம்.ஜி.ஆர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘உரிமை குரல்’ திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்படத்தில் ஒரு பாடல் வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறிவிட, பல பாடலாசிரியர்களை வைத்து பாடல் வாங்கினார் ஸ்ரீதர். ஆனால், அவருக்கு திருப்தி இல்லை. எனவே, எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் கண்ணதாசனை வைத்து அந்த பாடலை எழுதி வாங்கிவிட்டார்.
அந்த வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர் இது கண்ணதாசனின் ஸ்டைல் ஆயிற்றே எனக்கேட்க ஸ்ரீதரும் நடந்ததை சொல்லிவிட்டராம். அதற்கு ‘எனக்கும் கண்ணதாசனுக்கும் அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவரின் திறமையை நான் எப்போதும் குறைத்து மதிப்பிட்டதில்லை’ என சொன்னாராம். அப்படி உருவான திரைப்படம்தான் ‘விழியே கதை எழுது’ என்கிற காதல் பாடல். இப்பாடலை யேசுதாஸ் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கட்டையிலும் இது தரமான நாட்டுக்கட்ட!… முந்தானையை விலக்கி காட்டும் ரேஷ்மா…