Cinema News
மணி சார் ஆஃபீஸில் கார்த்தி செய்த காரியம்… திடீரென உள்ளே நுழைந்த இயக்குனரால் ஷாக் ஆன நடிகர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் கார்த்தி.
“பருத்திவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து “ஆயிரத்தில் ஒருவன்”, “பையா”, “நான் மகான் அல்ல” போன்ற பல திரைப்படங்களில் நடித்த கார்த்தி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்தார். மேலும் இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்ந்தார் கார்த்தி.
மிகவும் கவனமுடன் ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவராக கார்த்தி திகழ்கிறார். சமீபத்தில் கூட “பொன்னியின் செல்வன்”, “சர்தார்” போன்ற திரைப்படங்களில் கார்த்தியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.
கார்த்தி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை குறித்து கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: “துணிவு” படத்தின் கதையை அஜித்திடம் பல வருடங்களுக்கு முன்பே கூறிய இயக்குனர்… இது புதுசா இருக்கே!!
உதவி இயக்குனராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது ஒரு நாள் உணவு இடைவேளையில் மணி ரத்னம் வெளியே சென்றிருக்கிறார். அப்போது அலுவலகத்தில் கார்த்தி மட்டுமே இருந்தாராம். ஆதலால் தனக்கு முன்னால் இருந்த டேபிளில் தனது கால்களை நீட்டிக்கொண்டு நாற்காலியில் சுகமாக சாய்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு ஒரு ரஜினி பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தாராம்.
கார்த்தி திடீரென கண் முழிக்க அவர் முன் மணி ரத்னம் நின்றிருக்கிறார். அவரை பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டாராம் கார்த்தி. “என்ன பண்ணப்போறாரோ?” என பயத்துடன் இருந்தாராம் கார்த்தி. அப்போது மணி ரத்னம் கார்த்தியை முறைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டாராம்.