நான் அமைச்சராக இருக்கும் வரை இது நடக்காது: நிதிகட்காரி

Published On: December 21, 2019
---Advertisement---

8ff64e6a3c5e492c07c71d496580a01b

இந்தியாவில் ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும்,  தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் வரை இவ்வாஇ கார்களுக்கு அனுமதி கிடைக்காது என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் நிதின்கட்காரி அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அரசின் திட்டமாக இருப்பதாகவும், எனவே ஓட்டுனர்கள் இல்லாத வாகனங்களை அனுமதிப்பது குறித்த ஆலோசனைக்கே இடமில்லை என்றும் கூறினார்

மேலும் நாட்டில் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 15 ஆண்டுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் சான்றுகளை புதுப்பிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என அமைச்சர் உறுதியாக கூறியிருப்பதால் கூகுள் நிறுவனத்தின் தானியங்கு கார் இந்தியாவில் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது

Leave a Comment