Connect with us
vijayakanth

Cinema History

விஜயகாந்திற்காக ஃபிளாட்டையே எழுதி வைத்த தயாரிப்பாளர்!.. இதற்கெல்லாம் மயங்கிற ஆளா?.. பின்னனியில் இருக்கும் சோகக்கதை..

தமிழ் சினிமாவில் பெரும் வள்ளல் கொடையாக வாழ்ந்த நடிகர்களில் என்.எஸ்.கே, எம்ஜிஆர் இவர்களுக்கு பிறகு அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் நடிகர் விஜயகாந்த். கஷ்டம் என்று வரும் போது பல பிரபலங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறார் நம்ம கேப்டன்.

ஆனால் இன்று அவரை மிகவும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் காணமுடியவில்லை. ஓடி ஓடி உழைத்தஅவரது தேகம் இன்று ஒரே இடத்தில் இருப்பது ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவருக்கும் பெரும் கவலையாக இருக்கிறது.

vijayakanth1

vijayakanth1

பண விஷயத்தில் மிகவும் சாஃப்டாக டீல் பண்ணுகிறவர் விஜயகாந்த். ஒரு வேளை சம்பளப் பிரச்சினையில் ஏதாவதுமுடியாத சூழ் நிலையில் தயாரிப்பாளர்கள் இருக்கும் போது சம்பளத்தை ஒரு பொருட்டாமல் கருதாமல் தன் படம் மீதுநம்பிக்கை வைத்து முதலில் ரிலீஸ் செய்யுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மனித நேயம் படைத்தவர் கேப்டன்.

இதையும் படிங்க :டோட்டல் அப்செட்டில் தல!.. ‘துணிவு’ வெற்றிவிழாவை ரத்து செய்யச் சொன்ன அஜித்!..

அப்படி ஒரு நிகழ்வு தான் 1999 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் போது நடந்திருக்கிறது. கே. பாரதி இயக்கத்தில் விஜயகாந்த் , லைலா நடித்த படம் தான் கள்ளழகர். அந்த படத்தை தயாரித்தவர் ஹென்ரி.இந்த படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்ய போதிய பணம் தயாரிப்பாளரிடம் இல்லையாம்.விஜயகாந்திற்கும் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்ததாம்.

vijayakanth2

vijayakanth2

அப்போது விஜயகாந்த் முதலில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூற கேப்டன் சொன்னப்படிபடத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் ஹென்ரி. ஆனால் படம் சுமாராக போன நிலைமையிலும் அந்த ஒரு கோடி ரூபாயை அந்த தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யமுடியவில்லையாம்.

அதனால் அன்று விஜயகாந்த் என்னை நம்பி பணத்தை அப்புறம் கொடுங்கள் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக அவரை ஏமாற்றக்கூடாது என்று கருதி அவரின் ஒரு ஃபிளாட்டை விஜயகாந்த் பேருக்கும் எழுதிக் கொடுத்தாராம் அந்த தயாரிப்பாளர். இது விஜயகாந்த் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் காட்டுவதாக உள்ளது. இந்த சுவாரஸ்ய தகவலை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top