
Cinema News
கமுக்கமாக தயாரிப்பு பணியில் இறங்கிய தளபதி… இந்த படத்துக்கு விஜய்தான் புரொட்யூசரா?… இதெல்லாம் வேற நடக்குதா!
விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Leo
லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டது. எனினும் இத்திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளிவரும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த வாரம் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் புரோமோ வெளிவந்தது. அதே போல் படக்குழுவினரும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் பகுதிக்கு பயணமானார்கள்.

Leo
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் நேயர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதாவது “லியோ திரைப்படத்திற்கு விஜய் சைலன்ட் புரொட்யூசர் என்று ஒரு தகவல் வருகிறதே, அது உண்மையா? எல்லா முன்னணி கதாநாயகர்களும் இதே போல் லாபத்தில் பங்கு என்ற முறைக்குள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?” என்பதே அந்த கேள்வி.
இந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன் “லியோ திரைப்படத்திற்கு விஜய்யும் பங்குதாரர் என்று வெளிவந்த செய்தி உண்மையான செய்திதான். இப்பவும் பார்த்தீர்களானால் லாபத்தில் பங்கு என்ற முறைக்குள் பல நடிகர்கள் நடித்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான அளவிலே தமிழ் சினிமாவில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை” என்று பதிலளித்துள்ளார்.

Leo
ஆகையால் “லியோ” திரைப்படத்தில் சம்பளம் போக வருகிற லாபத்தில் ஒரு பங்கும் விஜய்க்கு சென்று சேரும் என தெரியவருகிறது. பிற்காலத்தில் பல முன்னணி நடிகர்கள் இது போல் நடைமுறைப்படுத்த வாய்ப்பும் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கு வந்தும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்த பிரபு… அப்படி என்ன நடந்தது தெரியுமா?