Connect with us
kanth

Cinema History

ரஜினியின் படத்தை மட்டும் எடுத்திருந்தா?.. இவர நம்புனதுக்கு?.. கேப்டனை பற்றி புலம்பும் இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி கொடிகட்டி பறந்த சமயத்தில் ஒரு சாதாரண மனிதனாக வந்தவர் விஜயகாந்த். ஆனால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு ரஜினிக்கு நிகராக போட்டி போட வைத்தது. மக்கள் செல்வாக்கை மிக விரைவில் பெற்றார் விஜயகாந்த். இருவரும் நல்ல அந்தஸ்தை பெற்ற நேரம் அது.

அந்த சமயத்தில் விஜயகாந்திடம் வந்து சேர்ந்தார் லியாகத் அலிகான் . இவர் ஒரு திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வசனகர்த்தாகவும் இருந்தார். லியாகத் அலிகானின் திறமையை பார்த்த விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும் அவரை இயக்குனராக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்கள்.

kanth1

vijayakanth rajini

அந்த நேரத்தில் தான் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார் லியாகத் அலிகான். நம்மை எப்படியாவது இயக்குனராக்கி விடுவார் என்ற எண்ணத்தில் விஜயகாந்திற்காகவே ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார் லியாகத் அலி. இதை அறிந்த ராம நாராயணன் அந்தக் கதைக்கு மோகன் சரியா இருப்பாரா என கேட்க அதற்கு இந்த கதை ஆக்‌ஷன் படம். மோகனுக்கு சரி இருக்காது என்று லியாகத் அலிகான் சொல்லியிருக்கிறார்.

இது அப்படியே ஏவிஎம் நிறுவனத்திற்கு போக அவர்களுக்கு கதை பிடித்துப் போக ரஜினியை வைத்து எடுக்கலாம் என லியாகத் அலிகானுக்கு அட்வான்ஸையும் கொடுத்திருக்கின்றனர். அதை வாங்கிக் கொண்டு அப்படியே விஜயகாந்திடம் வந்து சொல்லியிருக்கிறார் லியாகத் அலிகான். அவர் ஒன்றுமே சொல்லாமல் மறு நாள் இப்ராஹிமும் கேப்டனும் லியாகத் அலியை அழைத்து அட்வான்ஸை அப்படியே திருப்பிக் கொடுத்து விடு, நாங்கள் உன்னை இயக்குனர் ஆக்குகிறோம் என்று சொல்லி அட்வான்ஸை திரும்ப கொடுக்க வைத்திருக்கின்றனர்.

kanth2

vijayakanth

இங்க வந்து பார்த்தால் இவரை இயக்குனர் ஆக்காமல் அதே கதைக்கு வசனகர்த்தாவாக வேலை செய்ய சொல்லியிருக்கின்றனர். அந்தப் படம் தான் ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற திரைப்படம். அமீர்ஜன் இயக்கத்தில் லியாகத் அலிகான் வசனம் எழுத விஜயகாந்த்,ராதிகா நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் பெரும் தோல்வியை தழுவியது.

kanth3

vijayakanth

இதே மாதிரி சம்பவம் ஒன்று மீண்டும் நடந்திருக்கிறது. சத்யஜோதி தியாகராஜன் லியாகத் அலிகானை அழைத்து ரஜினியுடன் ஒரு படம் பண்ணப் போறேன், நீங்கள் தான் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் எல்லாம் என சொல்ல சந்தோஷத்தில் மீண்டும் விஜயகாந்திடம் வந்து சொல்லியிருக்கிறார். இந்த முறையும் இவரை விடக்கூடாது என்பதற்காக வேறொரு இயக்குனரை வைத்து ப்ளான் செய்த ‘எங்க முதலாளி’  படத்திற்கும் நீதான் இயக்குனர் என விஜயகாந்த் சொல்லிவிட்டார்.

இந்தப் படம் மிகப்பெரிய ப்ளாப். மேலும் இந்தப் படத்தின் மூலம் லியாகத் அலிகானுக்கும் பெரிய அடி. இதற்கு மற்றுமொரு காரணம் இந்தப் படம் வெளியான அதே நிலையில் தான் ‘கிழக்குச் சீமையிலே’ படமும் வெளியானது. இதை தயாரித்த பஞ்சு அருணாச்சலம் லியாகத் அலிகானிடம் உன்னை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டதற்கு நானும் ஒரு காரணம். அதனால் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றிப் படத்தை உனக்காக கொடுப்பேன் என்று வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

kanth4

liaquat ali khan

இந்த தகவலை லியாகத் அலி பேட்டியில் கூறும் போது ‘விஜயகாந்திற்கும் இப்ராஹிம் ராவுத்தருக்கும் என் மீது பிரியமா? இல்ல அளவு கடந்த பாசமா? இல்ல வேறெதுவுமா? என தெரியவில்லை. என்னை எப்படியாவது லாக் செய்ய வேண்டும் என ஒரு அன்பின் காரணமாக கூட இப்படி பண்ணியிருக்கலாம்’ என பெருந்தன்மையுடம் கூறினார். மேலும் கூறும்போது என் வாழ்க்கையில் வந்த இரண்டு பெரிய வாய்ப்புகளை இழந்துவிட்டேன்,  அதுவும் இரண்டு முறை ரஜினி படங்கள் மிஸ் ஆனது தான் இப்ப வரைக்கும் வருத்தத்தை அளிக்கிறது’ என அந்த பேட்டியில் லியாகத் அலிகான் கூறினார்.

இதையும் படிங்க : ஹீரோயினை மாற்றிய கடுப்பில் தயாரிப்பாளரையே மாற்றிய சத்யராஜ்!.. இது என்ன கூத்தா இருக்கு?.. யாருப்பா அந்த நடிகை?..

google news
Continue Reading

More in Cinema History

To Top