மணிரத்னத்திடமே மணிரத்னம் யார் என்று கேட்ட டாப் நடிகர்… யார்ன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

Published on: February 22, 2023
Mani Ratnam
---Advertisement---

கன்னடத்தில் “பல்லவி அனுபல்லவி” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய மணிரத்னம், மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்துதான் தமிழில் “பகல் நிலவு” திரைப்படத்தை இயக்கினார்.

Mani Ratnam
Mani Ratnam

“பகல் நிலவு” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “இதயக் கோவில்”, “மௌன ராகம்”, “நாயகன்”, “அக்னி நட்சத்திரம்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த மணிரத்னம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார்.

1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய “ரோஜா” திரைப்படம் அவரை இந்திய இயக்குனராக மாற்றியது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இந்திய அளவில் மிக முக்கிய இயக்குனராக மாறிப்போனார். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் மணிரத்னத்தை பார்த்து மணிரத்னம் யார் என கேட்டிருக்கிறார்.

Mani Ratnam
Mani Ratnam

1993 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய திரைப்படம் “திருடா திருடா”. இதில் பிரசாந்த், ஹீரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமையவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

Thiruda Thiruda
Thiruda Thiruda

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட் ஆனது. குறிப்பாக “வீரபாண்டிக் கோட்டையிலே” என்ற பாடல் இப்போதும் மிகப் பிரபலமான பாடலாக அறியப்படுகிறது.

இந்த நிலையில் “திருடா திருடா” திரைப்படம் உருவாவதற்கு முன்பு ஒரு நாள் மணிரத்னத்தை சந்தித்த பிரசாந்த், அவரிடம் “மணிரத்னம் யார்?” என கேட்டிருக்கிறார். இந்த கேள்வியால் மணிரத்னத்திற்கு சுத்தமாக கோபமே வரவில்லையாம். “நான்தான் மணி ரத்னம்” என கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

Prashanth
Prashanth

பிரசாந்த் தமிழ் சினிமாக்களை அவ்வளவாக பார்க்க மாட்டாராம். ஆங்கில திரைப்படங்களைத்தான் விரும்பி பார்ப்பாராம். ஆதலால்தான் பிரசாந்த்துக்கு மணிரத்னம் யார் என்று தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளையராஜாவை ஒருமையில் திட்டிய நபர்… கொந்தளித்த உதவியாளர்… இசைஞானி என்ன பண்ணார் தெரியுமா?