
Cinema News
சூர்யா, அஜித் ரெண்டு பேருக்குமே இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? – இருவர் வாழ்க்கையிலும் ஒரே மாதிரி நடந்த சம்பவம்!
Published on
By
திரையில் இப்போது பெரும் நடிகர்களாக இருப்பவர்கள் பலருக்கும் அதற்கான வாய்ப்பு கிடைத்த கதைகள் மாறும். சில நடிகர்கள் பல காலங்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி தேடி அழைந்து பல பேரிடம் பேசி வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.
ஆனால் சிலருக்கு தானாகவே வாய்ப்பு தேடி வரும். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு அவர்கள் சாதரண வாழ்க்கையைதான் வாழ்ந்து வருவார்கள். சூர்யா அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் தற்சமயம் டாப் நடிகர்களாக இருந்து வருபவர்கள்.
இவர்கள் நடிக்கும் திரைப்படம் என்றாலே மக்கள் மத்தியில் அந்த திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இவர்கள் இருவரது வாழ்க்கையும் ஒன்று போலவே இருந்துள்ளது. நடிகர் அஜித் தனது படிப்பை முடித்தவுடனேயே ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிப்புரிய சென்றுவிட்டார்.
அங்கு மேலாளருக்கு நிகரான ஒரு பதவியில் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த சமயத்தில் சொந்தமாக கார்மெண்ட்ஸ் துவங்கி அதில் சற்று தோல்வியை கண்டிருந்ததால், சரி சும்மா முயற்சித்து பார்ப்போம் என தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதே போல நடிகர் சூர்யாவும் கூட திரைக்கு வருவதற்கு முன்பு கார்மெண்ட்ஸில் மேலாளராகதான் பணிப்புரிந்து வந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு அவரது தந்தை மூலமாக வந்தது. நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரும் முயற்சித்து பார்ப்போம், இல்லையென்றால் மீண்டும் பழைய பணிக்கே வந்துவிடலாம் என்றுதான் சினிமாவிற்கு வந்தார்.
இருவருமே சினிமாவிற்காக பெரிதாக போராடவில்லை. முயற்சித்து பார்ப்போம் என்றே சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.
KPY Bala: சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றவர் கே பி ஒய் பாலா....
விமர்சகர்கள் வைத்த ஆப்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி. 75 வயதை கடந்தும் இன்றும் ரஜினி தமிழ்...
STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில்...
கோட் படத்தில் நடித்து கொண்டிருந்தபோதே தான் அரசியலுக்கு வரப்போவதாக விஜய் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி...
KPY Bala: கேபிஒய் பாலா குறித்து தொடர்ந்து பல சர்ச்சைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் பத்திரிக்கையாளர் உமாபதி ஒரு பெரிய...