ஒரு படத்திற்காக அனைத்துப் பாடல்களையும் பாடிய ஒரே பாடகர்!.. பின்னனியில் இருக்கும் இளையராஜாவின் பலே ஐடியா..

Published on: March 10, 2023
hari
---Advertisement---

தமிழ் சினிமாவில் மெலடிக் குரலுக்குச் சொந்தக்காரர் தான் பாடகரான ஹரிஹரன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி என அனைத்து மொழிகளிலும் தனது குரல் வளத்தை நிலை நாட்டியிருக்கிறார்.

hari1
hari1

கசல் பாடல்களை பாடுவதில் தேர்ச்சிப் பெற்றவர் ஹரிஹரன். தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகம் செய்யப்பட்டவர் இவர். ரோஜா படத்தில் ‘தமிழா தமிழா ’ என்ற பாடலை பாடி அதன் மூலம் மிகப்பெயரை பெற்றார் ஹரிஹரன்.

ஒன்பது மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் ஹரிஹரன் ஹிந்துஸ்தானி இசையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். மற்ற பாடகர்களை விட தமிழ் சினிமாவில் அதிக சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஒரே பாடகர் இவர் தான்.

hari2
hari2

இவரின் குரலில் என்றும் நீங்காத பாடல்களான பம்பாய் படத்தில் ‘உயிரே உயிரே’, ‘குச்சிப்புடி ராக்கம்மா’ , ஆசை படத்தில் ‘கொஞ்ச நாள் பொரு தலைவா’ போன்ற பாடல்கள் இன்றளவும் இளசுகளை குடையும் பாடலாகவே அமைந்திருக்கின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம் இவரின் குரல் தான்.

இந்த நிலையில் இதுவரை ஒரு படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஒரே பாடகர் பாடியதில்லை.ஆனால் அதை முற்றிலும் உடைத்தெறிந்திருக்கிறார் ஹரிஹரன். விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘காசி’ படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடியிருக்கிறாராம்.

hari3
hari3

ஏனெனில் அந்தப் படத்தில் விக்ரம் கண் தெரியாதவராக நடித்திருப்பார். அதனால் ஒரு கண் தெரியாதவர் பாடும் பாடல் அனைத்து சூழ் நிலைகளிலும் ஒரே மாதிரியான குரலில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என இளையராஜா சொன்னதின் பேரில் எல்லா பாடல்களையும் இவரே பாடியிருக்கிறார். பாடியதோடு மட்டுமில்லாமல் அந்தப் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இதையும் படிங்க : வில்லன் அவதாரம் எடுத்த மகிழ்திருமேனி!.. ஏகே – 62 படத்திற்கு வந்த புது பிரச்சினை!..