மொத்த படத்தையும் வேற மாதிரி கொண்டு வர்றோம்! – லியோ படத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பம்..!

Published On: March 11, 2023
---Advertisement---

நடிகர் விஜய்க்கு வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்து வரும் திரைப்படம் லியோ. ஏற்கனவே தமிழில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

leo poster

இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகும்போதே படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்தது லியோ குழு. எனவே வேக வேகமாக படப்பிடிப்பு நடந்துக்கொண்டுள்ளது. குளிர்நிலையிலும் காஷ்மீரில் தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் அதிக தொழில்நுட்பம் கொண்ட கேமிரா ஒன்றை லியோ படத்தின் படப்பிடிப்பிற்காக பிரத்யேகமாக இறக்கியுள்ளனர். அந்த கேமிராவிற்கு ஒரு நாளைக்கு வாடகை மட்டும் லட்சக்கணக்கில் வருகிறதாம். காஷ்மீரில் காலையில் 11 மணிக்குதான் சூரியன் உதிக்குமாம். அதுவும் மாலை 3 மணிக்கு மறைந்துவிடும். இந்த நிலையில் படம் எடுப்பதற்கு குறுகிய காலக்கட்டமே இருக்கிறது.

சாதரண கேமிராக்கள் இந்த குளிர்நிலையில் கோளாறு கொடுக்கும். எனவே இந்த அதிக தொழில்நுட்பம் கொண்ட கேமிராவை படப்பிடிப்பிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரெக்கார்டு செய்யும் விதமும் வீடியோ குவாலிட்டியும் மற்ற படங்களில் இருந்து மாறுபடுவதால் நமக்கு படம் பார்க்கும் அனுபவத்திலேயே மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.