லோகேஷ் கனகராஜுக்கும் விஜயகாந்துக்கும் இப்படி ஒரு உறவு இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Published on: March 19, 2023
Lokesh Kanagaraj
---Advertisement---

லோகேஷ் கனகராஜ்

சினிமா உலகில் அனுதினமும் போராடி வரும் உதவி இயக்குனர்களுக்கு ஒரு உந்துதல் தேவை. அந்த உந்துதலுக்கு ஒரு இயக்குனர் மிகவும் Inspiration ஆக இருப்பார். அவ்வாறு பல உதவி இயக்குனர்களுக்கு Inspiration ஆக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்க்குனராக பணியாற்றியது இல்லை.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

லோகேஷ் கனகராஜ் தொடக்கத்தில் வங்கி பணியாளராக இருந்தார் என்பதை பலரும் அறிவார்கள். இவ்வாறு வங்கி பணியாளராக இருந்த ஒருவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

விஜயகாந்துக்கும் லோகேஷுக்குமான கனெக்சன்…

அதாவது விஜயகாந்த்தின் ராவுத்தர் புரொடக்சன்ஸில் சௌந்தர் என்று ஒருவர் பணியாற்றி வந்தாராம். அவர்தான் விஜயகாந்த்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பாராம். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாம். அதன்படி மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தாராம். ஆனாலும் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்பதால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைத்தாராம்.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

அந்த சமயத்தில் சௌந்தர், தனது மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போதுதான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜ்ஜை தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்திருக்கிறார். இவ்வாறு சௌந்தரின் மகளுக்கு கணவராக ஆன லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு சினிமா எடுக்க முயற்சிக்கிறார். அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்துதான் லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்”. இவ்வாறு விஜயகாந்த்திற்கும் லோகேஷுக்கு இப்படி ஒரு தொடர்பு இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த சிம்பு இப்போ அடக்கி வாசிக்கிறது எதுக்காகத் தெரியுமா?? அவரே சொல்றார் பாருங்க…