தேசிங்கு பெரியசாமி, “கண்ணும் கண்ணூம் கொள்ளையடித்தால்” என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரும் ரஜினியும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

ரஜினிகாந்த்-தேசிங்கு பெரியசாமி கூட்டணி
அதனை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, ரஜினியிடம் கதை கூறியுள்ளதாகவும் ரஜினியும் அந்த கதையில் நடிப்பதற்கு ஓகே சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அந்த புராஜெக்ட் குறித்து எந்த தகவலும் அதன் பின் வெளிவரவில்லை.
இதனிடையே “அண்ணாத்த”, “ஜெயிலர்” ஆகிய திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், தா.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையேதான் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிலம்பரசனின் 48 ஆவது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளிவந்தது.
STR 48
இந்த நிலையில் சிலம்பரசனின் 48 ஆவது திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்கு சொன்ன கதையில்தான் தற்போது சிலம்பரசன் நடிக்க உள்ளாராம். அந்த கதைக்கு மிகப் பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதாம். ஆனால் அந்த கதையில் ரஜினி நடிக்க மறுத்த பிறகு சிம்புவிடம் வந்து அந்த கதையை கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தார் அந்த கதைக்கு மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்பட்ட காரணத்தினால், அந்த கதையில் சில பல மாற்றங்கள் செய்ய சொல்லி பட்ஜெட்டை குறைக்கச் சொன்னார்களாம். அதன் படி தேசிங்கு பெரியசாமி அந்த கதையில் சிலவற்றை மாற்றி குறைந்த பட்ஜெட்டில் அந்த கதையை உருவாக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம். இவ்வாறுதான் சிலம்பரசனின் 48 ஆவது புராஜெக்ட்டிற்குள் தேசிங்கு பெரியசாமி வந்துள்ளார்.
