கெட்ட பழக்கமெல்லாம் ஒன்னுமில்ல!.. வேற ஏதோ நடந்துபோச்சு!.. விஜயகாந்த் பற்றி உருகும் சந்திரசேகர்…

Published on: March 31, 2023
sac
---Advertisement---

திரையுலகில் ரஜினி, கமல் கோலோச்சிய காலத்தில் புதிய முகமாக நுழைந்தவர் விஜயகாந்த். கோபம் கொப்பளிக்கும் கண்களும், கருப்பு நிறமும், கணீர் குரலும் என ரசிகர்களை கவர்ந்தவர். பெண்களுக்கு தன்னுடைய அண்ணன் என்கிற உணர்வை கொடுத்தவர். அதனால்தான் அவரின் திரைப்படங்களை பெண்கள் விரும்பி பார்த்தனர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தார். துவக்கம் முதலே தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாகவே காட்டிக்கொண்டு முன்னணி நடிகராக உயர்ந்தார்.

vijayakanth
vijayakanth

கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார். அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே உணரமுடியாத நிலையில் அவர் இருப்பதுதான் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் பல வருட நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயகாந்த் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரது உடல்நிலை பற்றி பேசும்போது ‘எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களெல்லாம் காலத்திற்கும் வயதாகாமல் அப்படியே இருப்பார்கள் என நினைத்தேன். அதேபோலத்தான் விஜயகாந்தையும் நினைத்தேன்.

அவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் இல்லை. நன்றாக உழைத்த உடம்பு அது. கடைசிவரை அவன் அப்படித்தான் இருப்பான் என நினைத்தேன். அதனால்தான் அவன் உடல்நலம் பாதிக்கப்பட்ட பின் அவனை நான் நேரில் சென்று பார்க்கவில்லை. அவனை பார்த்து 10 வருடம் ஆகிறது. அவன் உடல்நிலைக்கு காரணம் கெட்டப்பழக்கம் என்கிறார்கள். எத்தனையோ கெட்ட பழக்கம் கொண்ட நடிகர்களெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். விஜயகாந்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது. இந்த நிலையில் இருக்கும் விஜயகாந்தை நேரில் பார்க்க எனக்கு விருப்பமில்லை. அதனால் பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்’ என பேசியுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.