Connect with us

Cinema News

எனக்கு ரசிகனா இருந்தா அவன் அறிவாளியாதான் இருப்பான்.. – கமல் சொன்ன புது விளக்கம்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமா திரைப்படங்களை கொண்டு வர முயற்சி செய்தவர் நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என அனைத்து துறைகளிலும் கமல்ஹாசன் சிறப்பாக பங்காற்றியவர்.

அவரது திரைப்படங்கள் பலவும் வெளியாகும் காலக்கட்டத்தில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அதற்கு பிறகு அதிகமாக பேசப்படும். தமிழில் வெளிவந்த ஹே ராம், ஆளவந்தான், போன்ற பல படங்கள் இப்போதும் சிறப்பாக பேசப்படும் படங்கள்.

ஆனால் அந்த மாதிரியான புது புது கதைகளை கமல் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வரும்போது அதனால் பெரும் இழப்புகளையும் சந்தித்துள்ளார். நிறைய படங்கள் ஓடாமல் போயுள்ளது. ஆனாலும் கமல்ஹாசன் இந்த மாதிரியான திரைப்படங்களை தயாரிப்பதை விடவே இல்லை.

இப்போதுதான் கொஞ்சம் ட்ராக் மாறி கமர்ஷியல் திரைப்படங்களை நோக்கி வந்துள்ளார். இதுக்குறித்து ஒருமுறை ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனிடம் “வித்தியாசமான படங்கள் என்றாலும் அவைதான் பெரிதாக ஓடலையே. பிறகு ஏன் திரும்ப திரும்ப அந்த மாதிரியான படங்களையே எடுக்குறீங்க” என கேட்டுள்ளார்.

ரசிகரின் மீது மதிப்பு கொண்டவர்:

அதற்கு பதிலளித்த கமல் வித்தியாசமான படம் எடுத்தா அதை குறைவா கொஞ்சம் பேர் பாக்குறாங்க இல்லையா. அவங்கதான் என் ரசிகர்கள். என் ரசிகர்கள் எல்லாரும் அறிவாளியாதான் இருப்பாங்க. அதனால் அவங்களுக்கான படத்தை நான் தொடர்ந்து எடுத்தாகனும் என கூறியுள்ளார்.

கமல் தனது ரசிகர்களுக்கு அவ்வளவு மதிப்பு தருபவர் என்பதை அப்போதுதான் ஸ்ருதிஹாசன் புரிந்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்திற்கும் வடிவேலுவுக்கும் உள்ள ஒற்றுமை!.. என்னதான் அடிச்சுக்கிட்டாலும் அதுல ஒன்னாதான் நிக்கிறாங்க..

Continue Reading

More in Cinema News

To Top