Cinema News
ரஜினியை அந்த விஷயத்தில் ஓவர் டேக் செய்த உலகநாயகன்… எல்லாம் இந்த ஒரு படம்தான் காரணம்!
கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பதை பலரும் அறிவார்கள். 1974 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “கன்னியாகுமரி” என்ற திரைப்படத்தில்தான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார் கமல்ஹாசன். அதன் பின் தமிழில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த கமல்ஹாசன், “மாலை சூடவா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் நடித்தார் கமல்ஹாசன். இத்திரைப்படத்தில்தான் ரஜினிகாந்த் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசனும் ரஜினிகாந்த்தும் “மூன்று முடிச்சு”, “ஆடு புலி ஆட்டம்”, “16 வயதினிலே”, “ஆடு புலி ஆட்டம்” போன்று கிட்டத்தட்ட 16 திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். இதற்கிடையே இருவரும் தனி தனியே நடித்திருந்தாலும் இவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இனிமே சேர்ந்து நடிக்க கூடாது
எனினும் அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிக்க கூடாது என முடிவெடுத்து தனி தனியாக நடிக்கத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து போட்டி நடிகர்களாக உருவானார்கள். எனினும் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு அளப்பரியது.
இந்த நிலையில் தற்போது “விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் வசூல் நாயகன் என்ற பெயரை பெற்று முதல் இடத்தில் இருக்கிறாராம் கமல்ஹாசன். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வந்தாலும் சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வியடைந்தன. ஆனால் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் உலகளவில் 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. ஆதலால் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக கமல்ஹாசன் திகழ்கிறாராம். இதற்கு முன் கமல்ஹாசனின் பல திரைப்படங்கள் காலத்தை தாண்டி பேசப்பட்டு வந்தாலும் அத்திரைப்படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 600 நாள் ஓடிய கமல்ஹாசன் திரைப்படம்… விக்ரம் படத்தையும் மிஞ்சிய ஹிட்…