Cinema History
திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பு.. கண்ணீர் விட்டபடி ஓடிய எம்.எஸ்.வி!.. காத்திருந்த அதிர்ச்சி!..
திரையுலகில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்கிற படத்தையும் பெற்றவர். கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர்.
அதேபோல், இவரின் இசையில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன், காதல், சோகம், தத்துவம் என என்ன மாதிரியான பாடல் என்றாலும் சரி தனது பாடல் வரிகளால் காட்சியின் சூழ்நிலையை ரசிகர்களின் மனதிற்கு கடத்திவிடுவார். எம்.எஸ்.வி தலையை பிய்த்துக்கொண்டு பல மணி நேரம் டியூன் போட்டால் கண்ணதாசன் இரண்டே நிமிடத்தில் பாடல் எழுதி கொடுத்துவிடுவார். எம்.எஸ்.விக்கும், விஸ்வநாதனுக்கும் இடையே நட்பு இருந்தது.
ஒருமுறை விஸ்வநாதனுக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் ‘கவிஞர் நம்மை எல்லாம் விட்டு போய்விட்டார்’ என அழுது கொண்டே சொல்ல, கண்ணீர் விட்டு கதறியபடி கண்ணதாசனின் வீட்டுக்கு ஓடியுள்ளார் எம்.எஸ்.வி. ஆனால், அங்கே கவிஞர் சிரித்துக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தாராம். யாரே ஒருத்தன் என்னிடம் நீங்கள் இறந்துவிட்டீர்கள் என பொய்யான தகவலை சொல்லிவிட்டான் என எம்.எஸ்.வி கண் கலங்க, கவிஞரோ ‘அதை நான்தான் செய்ய சொன்னேன். நான் இறந்துவிட்டால் நீ எப்படி வருத்தப்படுவாய் என்பதை பார்க்கத்தான் அப்படி செய்தேன். இப்போது சொல்கிறேன். நான் இறந்தால் என் இறுதிச்சடங்கை நீதான் செய்ய வேண்டும்’ என சொன்னாராம்.
கண்ணதாசன் 1981ம் ஆண்டு இறந்துபோனார். அவரின் ஆசைப்படியே அவரின் இறுதிச்சடங்குகளை எம்.எஸ்.விஸ்வநாதன் செய்தது குறிப்பிடத்தக்கது.