தமிழில் பல பிரபலங்களோடு நடித்த நடிகர்.. – இப்போ பீச்சில் ஐஸ் விக்கிறாராம்!..

Published on: April 11, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகர் மக்கள் மனதில் பிரபலமானால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி நிலைத்து நின்றவர்கள் சில பேர்தான்.

பல பேர் இருக்கிற இடமே தெரியாமல் காணமல் போயுள்ளனர். அந்த வரிசையில் முக்கியமானவர் நடிகர் பாரத் ஜெயந்த். பாரத் ஜெயந்த் தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

வானத்த போல திரைப்படத்தில் சின்ன வயது தம்பிகள் கதாபாத்திரம் வரும்போது அதில் சைக்கிள் கேட்டு அடம் பிடிக்கும் தம்பியாக இவர் நடித்திருப்பார். விஜயகாந்த் இவரை தூக்கி சென்று பள்ளியில் விட்டு வருவார்.

அதே போல ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்யின் சிறுவயது கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருப்பார். ப்ரியமான தோழி, இங்க்லீஷ் காரன் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஆனால் தற்சமயம் இவர் தமிழ் சினிமாவிலேயே இல்லை.

சினிமாவை விட்டு விலகினார்:

சினிமாவை விட்டு விலகி அவரே ஒரு ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டபோது ஏன் சினிமாவை விட்டு வந்து ஐஸ்க்ரீம் விற்றுக்கொண்டுள்ளீர்கள்? என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பாரத் ஜெயந்த் எந்த தொழில் செய்தாலும் சொந்த தொழிலாக இருக்க வேண்டும் என நினைத்தேன். யாருக்கும் அடிபணிந்து வேலை பார்க்க எனக்கு இஷ்டமில்லை. எனவேதான் இந்த கடையை துவங்கினேன் என கூறியுள்ளார்.

அந்த கடைக்கு வரும் பலரும் அவரை அடையாளம் கண்டுக்கொண்டு கேள்வி கேட்பதுண்டு. அவர்கள் அனைவருமே ஏன் சினிமாவை விட்டு வந்தீர்கள் எனதான் கேட்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாரதிராஜா மட்டும் நடிச்சிருந்தா படம் இவ்ளோதான்.. ‘விடுதலை’ படத்தை பற்றிய அனுபவத்தை பகிர்ந்த பிரபலம்!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.