Cinema History
இப்பதான் அப்பா உங்க அருமை புரியுது.! – வைரமுத்துவிடம் கண் கலங்கிய மகன்!..
தமிழ் பாடலாசிரியர்களில் வாலிக்கு அடுத்து ஒரு பெரும் பாடலாசிரியர் என்றால் அது கவிஞர் வைரமுத்து மட்டுமே. அவருக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் கவிஞர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.
முதன் முதலாக நிழல்கள் திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் கவிஞர் வைரமுத்து. இப்போதுவரை தமிழ் சினிமாவில் வைரமுத்துவின் வரிகளுக்கு தனி மதிப்பு உண்டு.
ஆனால் மாறிவரும் காலக்கட்டங்கள் எதையும் மாற்றிவிடுகின்றன. தற்சமயம் ட்ரெண்ட் ஆகும் பாடல்களின் வரிகள் எல்லாம் வைரமுத்துவிற்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு கவிஞராக அவர் அவரது பாடல்களில் அதிகமாக ஆங்கில சொற்களை பயன்படுத்த மாட்டார்.
அதே போல பேச்சு வழக்கில் உள்ள தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த மாட்டார். ஆனால் அதையெல்லாம் பயன்படுத்தும் பாடல்கள்தான் தற்சமயம் மாஸ் ஹிட் கொடுக்கின்றன. எனவே வைரமுத்துவிற்கு முந்தைய அளவிற்கு இப்போது வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
தந்தை பாசம்:
இருந்தாலும் தற்சமயம் திருவின் குரல் திரைப்படத்தில் தந்தை குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அது சற்று பிரபலமாகி வருகிறது. அப்போது அதுக்குறித்து பேசிய வைரமுத்து, பொதுவாக தாய்மார்கள் தங்கள் அன்பை பிள்ளைகளுக்கு வெளிப்படையாக காட்டிவிடுவார்கள்.
ஆனால் தந்தைகள் தங்கள் அன்பை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். மாறாக மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். இதனால் அவர்கள் பாசமாக இல்லை என பிள்ளைகள் நினைக்கின்றனர். ஆனால் இந்த சமூகத்தில் ஒருவன் நல்லவனாக இருக்க அப்பாவின் கண்டிப்பு தேவைப்படுகிறது. இதனால் அப்பாவின் தியாகம் மகன்களுக்கு தெரிவதில்லை.
என் மகனும் கூட என் பாசத்தை அறியாமல்தான் இருந்தான். அவன் ஒரு அப்பாவாக மாறிய பிறகுதான் “இப்பதான் அப்பா உங்க அருமை தெரியுது. என கண் கலங்கினான்” என கூறியுள்ளார் வைரமுத்து.
இதையும் படிங்க: 84 வயசுலதான் இதை சாதிச்சுருக்கேன்.. பாரதிராஜாவிற்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!..