Connect with us

Cinema History

84 வயசுலதான் இதை சாதிச்சிருக்கேன்!.. பாரதிராஜவுக்கு இப்படி ஒரு ஆசை இருந்துச்சா!..

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. அவர் படம் இயக்கிய காலக்கட்டத்தில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து படங்களை எடுத்தார். தொடர்ந்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் விஷயங்களை அவரது படங்களில் வைத்தார்.

வயதான பிறகு தற்சமயம் திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் பாரதிராஜா. எப்படி இயக்குனராக அவரது பயணத்தை சிறப்பாக கொண்டு சென்றாரோ அதே போல நடிகராகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பாரதி ராஜா.

அவர் நடித்த படங்களில் பாண்டிய நாடு, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்டவை. தொடர்ந்து அனைத்து பெரும் நடிகர்களோடும் நடித்து வருகிறார். தற்சமயம் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதிக்கு அப்பாவாக நடிக்கிறார் பாரதிராஜா.

தற்சமயம் ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவரிடம் பேசியப்போது நீங்கள் நடிக்கும் திரைப்படங்களை எல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாரதிராஜா, எனக்கு நடிப்புங்குறது உடம்புலையே ஊறி போனது. 1964 இல் நடிக்கதான் சினிமாவிற்கு வந்தேன்.

ஆனால் இயக்குனர் ஆகிவிட்டேன். இருந்தாலும் நடிகன் ஆகணுங்குற ஆசை மட்டும் போகவே இல்ல. இப்ப 84 வயசுல ஒரு நடிகன் ஆயிட்டேன் என கூறியுள்ளார். பாரதிராஜாவிற்கு நடிப்பின் மீது இவ்வளவு ஆர்வம் இருந்துள்ளது என்பதை அவரே கூறும்போதுதான் தெரிகிறது.

இதையும் படிங்க: ஒருதலை ராகம் ரிலீஸ்!..காத்து வாங்கிய தியேட்டர்கள்.. அதுமட்டும் நடக்கலனா டி.ராஜேந்தரே இல்ல!..

google news
Continue Reading

More in Cinema History

To Top