வளர்த்துவிட்ட சினிமாவை மறக்கலாமா?!.. – நயன்தாராவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம்..

Published on: April 13, 2023
Nayanthara
---Advertisement---

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தனது வாழ்க்கையின் பல மோசமான பகுதிகளை கடந்து வந்திருக்கிறார் இவர். இவரும் சிலம்பரசனும் ஒரு காலகட்டத்தில் காதலித்து வந்தனர். ஆனால் சில மாதங்களில் இருவரும் பிரிந்தனர். அதன் பின் பிரபு தேவாவை காதலிக்கத் தொடங்கினார் நயன்தாரா. ஆனால் பிரபு தேவாவுக்கு மனைவி இருந்ததால் இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. அந்த சமயத்தில் மிக கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர்கொண்டார் நயன்தாரா.

அதனை தொடர்ந்து பிரபு தேவாவிடம் இருந்தும் பிரிந்துவிட்டார். அந்த தருணத்தில் நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார். ஆதலால் நயன்தாராவின் கெரியரே குளோஸ் என்று பேச்சுக்கள் அடிப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக “மாயா”, “கொலையுதிர் காலம்”, “மூக்குத்தி அம்மன்”, “நெற்றிக்கண்”, “ஓ2”, “கனெக்ட்” போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தார். தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.

கடந்த வருடம் நயன்தாராவும் விக்னேஷ் சினனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். மேலும் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தைவக் என் சிவன் என பெயர் சூட்டினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான அந்தணனிடம், நிருபர் “நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவரது திரைப்படங்களுக்கான அப்டேட் வரவில்லையே?” என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அந்தணன் “நயன்தாரா தனக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாக இருப்பதால் கம்மி பட்ஜெட்டில் படம் எடுத்து அதனை ஓடிடியில் அதிகமாக விற்றுவிடலாம் என நினைக்கிறார். நயன்தாரா கனெக்ட் என்று ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்தார். ஒரு வேளை அறம் மாதிரியான ஒரு திரைப்படத்தை தயாரித்து ரசிகர்களை பிரம்மிக்க வைத்திருந்தால் நயன்தாராவின் மார்க்கெட்டை நயன்தாரா நினைத்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.

நயன்தாரா என்ன செய்கிறார் என்றால், கம்மெர்சியலாக ஒரு விஷயம் செய்து எப்படியாவது தனது பாக்கெட்டை நிரப்பினால் போதும் என்று நினைக்கிறார். அங்குதான் இயற்கை அவருக்கு தண்டனை கொடுக்கிறது. இந்த சினிமாதானே உங்களை வளர்த்துவிட்டது. அதே சினிமாவை தாங்கள் தவறாக பயன்படுத்தும்போது உங்களுடைய மார்க்கெட் கீழே இறங்குகிறது. இந்த தவறை அவர் செய்ததுதான் அவரது மார்க்கெட்டின் பின்னடைவிற்கு காரணம்” என கூறியிருந்தார்.

நயன்தாரா தற்போது ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அஜித்குமார் சொந்த படம் எடுக்காததற்கு இப்படி ஒரு விநோத காரணம் இருக்கா?… என்னப்பா சொல்றீங்க!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.