விஜயெல்லாம் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது!… ரமேஷ் கண்ணா விளாசல்!…

Published on: April 13, 2023
ramesh khanna
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்தை தன் வசம் வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் திரைப்படங்கள் வசூலை வாரி குவித்ததால் இவருக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், சமீபகாலமாக ரஜினி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம் நடிகர் விஜயும் ரஜினி வாங்கும் அளவுக்கு சம்பளத்தை வாங்க துவங்கிவிட்டார். இன்னும் சொல்லபோனால் ஜெயிலர் படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளத்தை விட லியோ படத்திற்கு விஜய் பல கோடிகள் அதிகமாக வாங்கியுள்ளார்.

ஒரு நடிகரின் கால்ஷீட் வேண்டுமெனில் தயாரிப்பாளர்கள் அவருக்கு துதி பாட துவங்குவார்கள். அப்படித்தான் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்தான் சூப்பர்ஸ்டார் என பேச அது பற்றிக்கொண்டது. விஜய் ரசிகர்கள் அதற்கு ஆதரவும், ரஜினி ரசிகர்கள் அதற்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். ஆனால், விஜயும், ரஜினியும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், தனக்கு அந்த பட்டத்தின் மீது ஆசையில்லை. ரஜினி மட்டுமே சூப்பர்ஸ்டார் என விஜயும் கூறவே இல்லை. இதை வைத்து பார்க்கும் போது அந்த பட்டத்திற்கும் அவரும் ஆசைப்படுவதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், விஜயுடன் ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தவரும், இயக்குனர் மற்றும் நடிகருமான ரமேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘ரஜினிதான் எப்போதும் சூப்பர்ஸ்டார். அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அவரது பட்டத்திற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள் என தெரியவில்லை. நீங்கள் வேண்டுமானால் அல்டிமேட் ஸ்டார் போல வேறு எதையாவது வைத்துக்கொள்ளுங்கள்’ என ஓப்பனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இந்த விஷயம் பெருசா யாருக்கும் தெரியாது.. இளையராஜா பற்றி வாலி சொன்ன சீக்ரெட்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.