Cinema News
இளையராஜாவை தோண்டுங்க.. எல்லாம் வெளியில வரும்.. கூச்சப்படாமல் சொன்ன வைரமுத்து!..
தமிழ் சினிமாவில் தான் ஒரு கவிஞன் என்பதை எப்போதும் நிலை நாட்டிக் கொள்பவர் கவிஞர் வைரமுத்து. கல்லூரியில் படிக்கும் போதே தான் உருவாக்கிய படைப்பை மற்றொரு கல்லூரியில் பாடப்பொருளாக வைக்கப்பட்ட பெருமைக்குரியவர் வைரமுத்து. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக தன் ஆளுமையை நிரூபித்தி வருகிறார்.
அவரை பற்றி தேவையில்லாத செய்திகள் வந்தாலும் கவிஞன் என்ற தன்மையில் இருந்து அவர் என்றைக்கும் மாறியதில்லை. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதை, நாவல், புதினம் , கட்டுரை என அனைத்து துறைகளிலும் முயற்சிகளை எடுத்திருக்கிறார் வைரமுத்து.
வைரமுத்துவின் கவிதைகள் பழைய நடைமுறைகளை பின்பற்றியே இருக்கும். தமிழின் இனிமை தத்தளிக்கும். தெளிவான குரலில் இவரின் கவிதைகளை கேட்கும் போது தமிழ் மீது ஒரு தனிப்பற்றே வரக்கூடும். அந்த அளவுக்கு ரசித்து தன் கவிதைகளை பேசுவார்.
இந்த நிலையில் சமீபத்தில் ‘திருவின் குரல்’ என்ற படத்தின் புரோமோஷனில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து பல ஆளுமைகளை பற்றி தன் அனுபவத்தை கூறினார். அந்தப் படத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா போன்றோர் நடித்திருக்கின்றனர்.
பாரதிராஜாவை பற்றி பேசிய வைரமுத்து பாரதிராஜாவின் படங்களில் கிராமங்களின் மண் வாசனை மணக்கும் என்றும் இன்று பல பேருக்கு தெரியாத வீட்டின் கருப்பொருள்கள் அவர் படத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என கூறினார்.
மேலும் பஞ்சரம் என்றால் பல பேருக்கு தெரியவில்லை. அதன் பொருள் கோழியை அடைச்சு வைக்கிற கூடை. இப்படி சொன்னாலும் தெரியவில்லை. இதெல்லாம் களத்தில் பயன்படுத்துகின்ற கலைசொற்கள். இந்த வட்டாரச்சொற்கள் எல்லாம் அந்தந்த மண்ணை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அதை படங்களின் மூலம் கொடுக்க முடிந்தது என்று வைரமுத்து கூறினார். இப்படி எல்லாம் இருக்கிறதன் பயனாக அந்த கலை வெற்றிப் பெற்றது, நாங்கள் வெற்றி பெற்றோம், தமிழர்கள் எங்களை கொண்டாடினார்கள், என்றும் கூறினார்.
இதையும் படிங்க : ஒரே படத்துல ரெண்டு பேருக்கு டப்பிங் கொடுத்த விக்ரம்… ஆனா கண்டுபிடிக்கவே முடியல!..
மேலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் தமிழகமே நகரமையமாகி விட்டபிறகு அந்த வட்டாரச்சொற்களை பற்றி தெரியவேண்டுமென்றால் பாரதிராஜாவின் படங்களை பார்த்தால் போதும். பழைய வாழ்க்கையை தோண்டுவதற்கு இன்று கீழடியை தோண்டும் நாம் இன்னும் பழைய வாழ்க்கையை தோண்டுவதற்கு பாரதிராஜாவை தோண்டினால் போதும், வைரமுத்துவை தோண்டினால் போதும்,
நான் இதை சொல்ல கூச்சப்படவில்லை, இளையராஜாவை தோண்டினால் போதும் என்று தன் மனதில் பட்ட எண்ணங்களை கூறினார்.