ஒரே படத்துல ரெண்டு பேருக்கு டப்பிங் கொடுத்த விக்ரம்... ஆனா கண்டுபிடிக்கவே முடியல!..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் பலவிதமான திறமைகளை கொண்டிருப்பதுண்டு அப்படி தமிழ் சினிமாவில் அதிகமான திறமையை கொண்ட ஒரு நடிகராக நடிகர் விக்ரம் இருக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகராக விக்ரம் பார்க்கப்படுகிறார்.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் விக்ரம் நடிப்பதை தாண்டி வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அப்போதைய காலகட்டத்தில் விக்ரமிற்கு டப்பிங் மீது ஒரு ஆவல் இருந்தது. சினிமாவிற்கு வந்த புதிதில் பல படங்களில் நடிகர்களுக்கு விக்ரம் டப்பிங் செய்துள்ளார்.

முக்கியமாக நடிகர் பிரபுதேவா சினிமாவிற்கு வந்த புதிதில் அவருக்கு விக்ரம் தான் டப்பிங் செய்து வந்தார். அதேபோல நடிகர் அப்பாஸ் சினிமாவிற்கு வந்த போதும் அவருக்கும் நடிகர் விக்ரம் தான் டப்பிங் செய்திருந்தார். காதல் தேசம் திரைப்படத்தில் கூட அப்பாஸிற்கு விக்ரம்தான் டப்பிங் செய்திருந்தார்.

இரண்டு பேருக்கு டப்பிங் செய்த விக்ரம்:

இந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் அப்பாஸ் இருவருமே சேர்ந்து நடித்து விஐபி என்கிற திரைப்படம் வெளியானது. அப்போதைய காலகட்டத்தில் இவர்கள் இருவருக்குமே விக்ரம் தான் டப்பிங் கொடுத்து வந்தார் என்பதால் ஒரே படத்தில் இருவருக்கும் டப்பிங் கொடுக்கும் போது அது மக்களால் கண்டறியப்படலாம் என்கிற பிரச்சனை இருந்தது.

ஆனால் தனது குரல் தன்மையை மாற்றி இருவருக்குமே டப்பிங் செய்தார் நடிகர் விக்ரம். விஐபி திரைப்படம் வெளியான பிறகும் கூட பல நாட்களுக்கு இருவருக்குமே விக்ரம் தான் டப்பிங் செய்தார் என்கிற விஷயம் வெளியில் தெரியாமல் இருந்தது. அந்த அளவிற்கு இருவருக்குமே மிக நேர்த்தியாக டப்பிங் செய்திருந்தார் விக்ரம்.

இதையும் படிங்க: போதைக்கு அடிமையான ஜெய்… டாட்டா காண்பித்து எஸ்கேப் ஆன அஞ்சலி… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

 

Related Articles

Next Story