Connect with us

Cinema News

அவரை பார்த்தா மட்டும் எனக்கு பயம்!- விக்னேஷ் சிவனையே பயமுறுத்திய யூ ட்யூப்பர்!..

தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 2012 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இதற்கு பிறகு கொஞ்ச காலம் விக்னேஷ் சிவனிற்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. பிறகு ஒரு வழியாக நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போதுதான் முதன் முதலாக இவர் நயன்தாராவை சந்தித்தார். அதன் பிறகே இவர்கள் இருவருக்கும் காதலானது. நானும் ரவுடிதான் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. நடிகர் விஜய் சேதுபதிக்கும் கூட இது முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஆனால் அதற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் விக்னேஷ் சிவனும், யூ ட்யூப் விமர்சகர் பிரசாந்தும் பேசிக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் பேசும்போது சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டத்தில் நான் பிரசாந்தின் விமர்சனங்களுக்கு மிகவும் பயப்படுவேன்.

உண்மையை மட்டும்தான் பேசுவேன் என பிரசாந்த் பேசிவிடுவார். அதிலும் சில படங்களை எல்லாம் நன்றாக கலாய்ப்பார். அதையெல்லாம் ரசித்து பார்ப்பேன். ஆனால் என் படம் குறித்து அவர் அளித்த விமர்சனங்களை மட்டும் நான் பார்க்க மாட்டேன் என கூறியிருந்தார்.

மேலும் மீடியாக்களில் தொடர்ந்து அவரை குறித்தும் நயன் தாரா குறித்தும் பொய்யாக கூறி வருவதையும் அவர் விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: இப்படி செய்யாதீங்க… எல்லோர் முன்னாடியும் அசிங்கமா போயிடும்!. விஜயகாந்த் படத்தில் தயாரிப்பாளர் செய்த வேலை…

Continue Reading

More in Cinema News

To Top