Connect with us

Cinema History

இப்படி செய்யாதீங்க… எல்லோர் முன்னாடியும் அசிங்கமா போயிடும்!. விஜயகாந்த் படத்தில் தயாரிப்பாளர் செய்த வேலை…

தமிழ் சினிமாவில் 1980 களில் பெரும் ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராஜசேகர். 1981 ஆம் ஆண்டு கண்ணீர் பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமனார்.

முதல் படமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்றார். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய மலையூர் மம்பட்டியான், தம்பிக்கு எந்த ஊரு போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.

surya2
vijayakanth

1987 இல் இவர் இயக்கி, விஜயகாந்த் நடிப்பில் கூலிக்காரன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார். நடிகை ரூபினி இதில் கதாநாயகியாக நடித்தார். பொதுவாக படப்பிடிப்பு நடக்கும்போது அந்த இடத்திற்கு தாணு செல்லமாட்டார்.

ஆனால் கூலிக்காரன் படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்ததால் அதை பார்ப்பதற்காக தாணு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அப்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த காட்சியில் ஒரு இடத்தில் தெரியாத்தனமாக கண்களை மூடிவிட்டார் நடிகை ரூபினி.

இயக்குனர் இந்த விஷயத்தை கவனிக்கவில்லை. ஆனால் தாணு கவனித்துவிட்டார். இயக்குனர் டேக் ஓ.கே என கூறியதும், தாணு சும்மா நில்லாமல் ஹீரோயின் கண்ண மூடிட்டாங்க, ரீ டேக் எடுங்கப்பா என கூறிவிட்டார். உடனே இயக்குனர் தாணுவை தனியாக அழைத்து சென்றார்.

படம் எடுக்கும்போது இந்த மாதிரி சத்தம் போட்டு அதுல இருக்குற தப்பை சொல்லாதீங்க. அது எனக்கு எல்லார் முன்னாடியும் அசிங்கமா போயிடும் என கூறியுள்ளார் இயக்குனர். அதன் பிறகு தாணு அவர் தயாரிக்கும் எந்த படத்திற்குமே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதில்லையாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top