Connect with us
Rajni 175

Cinema History

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள்… வருடக்கணக்கில் ஓடிய சந்திரமுகி..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முதல் வெள்ளி விழா படம் பாரதி ராஜா இயக்கத்தில் 1977ல் வெளியான பதினாறு வயதினிலே. இது 233 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. 1978ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் ப்ரியா. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. இது பல திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது.

1980ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம் பில்லா. ரஜினி, ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். 1983ல் ஏ.ஜெகந்நாதன் இயக்கிய படம் தங்கமகன். இந்தப் படத்தில் ரஜினி, சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் செம மாஸாக இருக்கும். இது மதுரை மீனாட்சி தியேட்டரில் 232 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

Padikkathavan

Padikkathavan

1985ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான படம் படிக்காதவன். ரஜினி, சிவாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது. 1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் மனிதன். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ரஜினி, ரூபினி, ரகுவரன், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இது நல்ல கலெக்ஷனைக் கொடுத்தது. பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டது.

1989ல் வெளியான படம் ராஜாதிராஜா. ஆர்.சுந்தரராஜன் இயக்கியுள்ளார். ராதா, நதியா உள்பட பலரும் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர். இதுவும் வெள்ளி விழா படம் தான். 1989ல் வெளியான படம் ராஜா சின்ன ரோஜா. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். ரஜினி, கௌதமி உள்பட பலர் நடித்துள்ளனர். இது வெள்ளி விழா படம்.

1989ல் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் மாப்பிள்ளை. ரஜினி, அமலா உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த படம். வெள்ளி விழா கண்டது. பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடியது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் செம மாஸ் ரகங்கள்.

1990ல் வெளியான படம் பணக்காரன். பி.வாசு இயக்கிய படம். ரஜினி, கௌதமி உள்பட பலர் நடித்துள்ளனர். இது பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்ட படம். 1991ல் வெளியான படம் தர்மதுரை. ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த படம். ரஜினி, கௌதமி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு வெள்ளி விழா படம்.

1991ல் வெளியான தளபதி மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது. ரஜினி, ஷோபனா மம்முட்டி, அரவிந்த்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் மாஸ். இதுவும் வெள்ளி விழா படம் தான்.

Mannan

Mannan

அடுத்ததாக 1992ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான மன்னன். ரஜினியுடன் இணைந்து பிரபு நடித்துள்ளார். அதே ஆண்டில் வெளியான படம் அண்ணாமலை. ரஜினி, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் கிருஷ்ணா இசை அமைத்துள்ளார். 1993ல் ஆர்.உதயகுமார் இயக்கத்தில் வெளியான எஜமான். ரஜினி, மீனா உள்பட பலர் நடித்துள்ளனர். 1995ல் வெளியான படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசை அமைத்த படம். அடுத்ததாக 1997ல் வெளியான படம் அருணாச்சலம். சுந்தர.சி. இயக்கத்தில் தேவா இசையில் வெளியான படம்.

அடுத்ததாக 1999ல் வெளியான படையப்பா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்கில் வெளியான படம். 2005ல் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். ஒரு வருடம் கடந்து ஓடி சாதனை படைத்த படம். சென்னை சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாள்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.2007ல் ஷங்கர் இயக்கிய படம் சிவாஜி. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அடுத்த படம் 2016ல் பா.ரஞ்சித் இயக்கிய படம் கபாலி. இதுதான் ரஜினியின் கடைசி வெள்ளி விழா படம். இப்படி மொத்தம் சூப்பர்ஸ்டாருக்கு 21 படங்கள் வெள்ளி விழா கண்ட படங்கள் வந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema History

To Top