Cinema History
இப்ப உள்ள சினிமாக்காரங்க மோசம், பாடலாசிரியர்கள்தான் பாவம்… உண்மையை உடைத்த வாலி!..
தமிழ் சினிமாவில் உள்ள பாடலாசிரியர்களில் அதிக காலம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் பாடலாசிரியர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் துவங்கி விஜய் அஜித் காலக்கட்டம் வரை தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் வாலி.
வாலி ஒரு பேட்டியில் பேசும்போது முன்பு இருந்தது போல இப்போது தமிழ் சினிமா இல்லை என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் பாடலாசிரியர்களுக்கு பெரும் மதிப்பு இருந்தது. கண்ணதாசன் மாதிரியான பாடலாசிரியர்கள் பாடல் எழுதினாலே அந்த பாடல்கள் ஹிட் கொடுத்துவிடும்.
வாலிக்கு ஏற்பட்ட அதிருப்தி:
இதனால் பாடலாசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. கண்ணதாசனுக்கும் சிவாஜிக்குமிடையே சண்டை ஏற்பட்டபோது கூட கண்ணதாசனுக்கு இருந்த முக்கியத்துவம் காரணமாக சிவாஜி கணேசன் அடுத்த படங்களுக்கு கண்ணதாசனையே பாடல் வரிகள் எழுதுவதற்கு அழைத்தார்.
ஆனால் இப்போது சினிமா அப்படியாக இல்லை என கூறுகிறார் வாலி. அப்போது பாடலாசிரியர்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை. முன்பெல்லாம் ஒரு பாடல் வரிகள் நன்றாக வந்தால் அதற்கான புகழ் அந்த பாடலாசிரியர்களுக்கு செல்லும்.
ஆனால் இப்போதெல்லாம் வேறு யார் யாரோ அதற்கான புகழை பெற்றுக்கொள்கின்றனர். ஒருமுறை வைரமுத்து கூறும்போது வாலி, கண்ணதாசன் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள். அவர்கள் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தனர் என கூறியுள்ளார். அது உண்மைதான் என வாலி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புரோமோஷன் போனத கூட படமா எடுத்திருந்திருக்கலாம்!.. திணறிய மணிரத்தினம்.. எங்கெல்லாம் மிஸ் பண்ணார் தெரியுமா?..