Connect with us
ps

Cinema News

கதையை மாற்றியதில் என்ன தவறு இருக்கு?.. ‘பொன்னியின் செல்வன்’ விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்..

உலகம் எங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வெற்றியை பதிவு செய்தது அது மட்டும் இல்லாமல் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கும் சரி படிக்காதவர்களுக்கும் சரி முதல் பாகம் ஒரு மனதிருப்தியை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் மணிரத்தினம் முழுவதுமாக என்னென்ன கதாபாத்திரங்கள் இருக்கின்றன என்ற ஒரு அறிமுகத்தை மட்டுமே சொல்லி இருந்தார்.

எம்ஜிஆர் முதல் சிவாஜி கமல் ஆகியோர் கையில் எடுத்தும் முழுமை பெறாத பொன்னியின் செல்வனை மணிரத்தினம் இன்று முழுவதுமாக எடுத்து நடத்தி காட்டி இருக்கிறார். அதற்காகவே அவருக்கு பெரிய பாராட்டுகளை பல ஊடகங்களும் பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் மணிரத்தினம் எப்படி அந்த கதையை மக்களிடையே கொண்டு செல்ல போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. அவர்கள் சந்தேகப்பட்ட மாதிரியே நாவலில் இருந்த கதையிலிருந்து சற்று கதையை மாற்றி அமைத்திருந்தார் மணிரத்தினம்.

அது நாவலை படித்தவர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதைப் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. படத்தில் ஒரு சில இடங்களில் கதையில் இருந்த முக்கியமான காட்சிகளை மணிரத்தினம் மாற்றி இருந்தார் குறிப்பாக ஆதித்ய கரிகாலன் யாரால் கொல்லப்பட்டார் என்பதை படத்தில் காட்டவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அது மட்டும் இல்லாமல் இறுதியாக நந்தினி குதிரையில் ஏறி வேகமாக சென்று மறைவது மாதிரி நாவலில் இருக்குமாம் .ஆனால் படத்தில் மணிரத்தினம் நந்தினியை தண்ணீரில் மறைவது மாதிரி காட்டியிருப்பார் .இதைப் பற்றியும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதைப் பற்றி பல ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர் .அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு பதிலை கூறியிருக்கிறார் .அதாவது மணிரத்தினம் எக்காரணம் கொண்டும் இது கல்கியின் பொன்னியின் செல்வன் என்று சொல்லவில்லை. பொன்னியின் செல்வன் கதையை தழுவி எடுக்கப்பட்ட கதை என்றுதான் சொல்லி இருக்கிறார். ஆகவே ஒரு தழுவி எடுக்கப்பட்ட கதையில் எப்படி வேண்டுமானாலும் படத்திற்கு ஏற்ப கதையை மாற்றி அமைக்கும் உரிமை மணிரத்தினத்திற்கு உண்டு என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : தனுஷை வச்சி ஒரு கே.ஜி.எஃப் கதை.. வெற்றிமாறன்தான் இயக்குனர்- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்..!

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top