சரத்பாபுவின் உடல்நிலை !..யார்கிட்டயும் சொல்லவில்லை.. இப்படியும் ஒரு மனிதரா?..

Published on: May 5, 2023
sarath
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக இருந்தவர் நடிகர் சரத் பாபு. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்துள்ளார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சரத் பாபு தெலுங்கு சினிமா மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

கே பாலச்சந்தரால் தமிழில் நிழல் நிஜமாகிறது என்ற படத்தின் மூலம் முதன்முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் சரத் பாபு .மேலும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான சிவாஜி, கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.

கமல் 60 என்ற தொகுப்பில் 60 முக்கிய பிரபலங்களை கமல் எப்படி நினைவுப்படுத்தி கூறினாரோ அதேபோல ரஜினியின் நெருங்கிய வட்டாரங்களில் சரத் பாபுவிற்கு என்று ஒரு தனி இடமே உண்டு. ரஜினியின் பெரும்பாலான படங்களில் சரத்பாபு கண்டிப்பாக இருப்பார். அது மட்டும் இல்லாமல் அந்த காலங்களில் ரஜினி படத்தில் நடிக்கும் போது சரத் பாபுவின் பெயரையும் பரிந்துரை செய்வாராம்.

ரஜினி, சரத் பாபு ஆகிய இருவருக்கும் முக்கிய படமாக அமைந்தது அண்ணாமலை படம் தான். மேலும் முத்து படத்திலும் அவர்கள் இருவரின் நடிப்பும் பாராட்டக் கூடியதாக இருந்தது. கூச்ச சுபாவம் கொண்ட சரத் பாபு பெரும்பாலும் யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டாராம். தனியாக ஒதுங்கியே இருப்பாராம்.

அந்தக் காலத்தில் முத்துராமன் எப்படி ஒரு முக்கியமான நடிகராக இருந்தாரோ அதேபோல சரத் பாபுவும் இருந்துள்ளார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கால முத்துராமன் என்று தான் அவரை கூறுகிறார்கள்.

இந்த நிலையில் சரத் பாபுவின் உடல்நிலை குறித்து சமீப தினங்களாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் அவர் மரணம் அடைந்து விட்டார் என்றும் கூறி பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவருக்கு ஏதோ ஒரு தொற்று வைரஸ் ஏற்பட்டிருக்கிறதாம். அதற்கான சிகிச்சைகள் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஆனால் இதைப் பற்றி எதுவுமே சரத் பாபு யாரிடமும் சொல்லாமல் தான் இருந்தாராம் .அதாவது பிரபலங்கள் மத்தியிலும் தனக்கு நெருக்கமான வட்டாரங்கள் மத்தியிலும் யாரிடமும் அவர் இதைப் பற்றி பகிர்ந்தது கூட இல்லையாம். தன்னால் யாருக்கும் இடையூறு வரக்கூடாது என்பதற்காகவே இதை பெரிதாக அவர் நினைக்காமல் தன் உறவினர்களுடன் மட்டுமே பகிர்ந்து தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம்.

இதையும் படிங்க : வாலி எழுதுன ஒரே ஒரு பாட்டு… படக்குழுவிற்கு வந்த கோர்ட் நோட்டீஸ்… எந்த பாட்டு தெரியுமா?

மேலும் சரத் பாபு தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நம்பியாரின் மகளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தாராம் .நம்பியாரைப் போலவே சரத்பாபுவும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு பூஜைகள் செய்வாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.