Connect with us
Vaali

Cinema History

வாலி எழுதுன ஒரே ஒரு பாட்டு… படக்குழுவிற்கு வந்த கோர்ட் நோட்டீஸ்… எந்த பாட்டு தெரியுமா?

எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் துவங்கி விஜய் அஜித் காலக்கட்டம் வரை பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியவர் கவிஞர் வாலி. அதனால் தமிழ் சினிமாவில் அதிக காலம் பயணித்தவராக கவிஞர் வாலி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல் வரிகளை எழுதினார்.

வாலி பாடல் வரிகள் எழுதியபோது அதில் பல பாடல் வரிகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. எங்க வீட்டு பிள்ளை படத்திலேயே நான் ஆணையிட்டால் பாடல் சென்சார் வரை சென்று சர்ச்சையாகி பிறகு பாடல் வரிகள் மாற்றப்பட்டது.

அதே போல ரஜினி படத்திலும் கூட ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் பாபா. பாபா படத்திற்கு அனைத்து பாடல்களுக்கும் பாடல் வரிகளை வாலிதான் எழுதினார்.

பாட்டு ஏற்படுத்திய சர்ச்சை:

அந்த படத்தில் ஆயிரம் அதிசயம் நடந்தது பாபா ஜாதகம் என்கிற பாடல் வரும். அதில் அதுவரை நாத்திகனாக இருந்த பாபா, ஆத்திகனாக மாறுவது போன்ற காட்சி வரும். அதற்கு வரிகள் எழுதிய வாலி அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி என எழுதினார். இந்த வரிகள் அப்போது பெரும் சர்ச்சை ஆனது.

baba

வாலி போகும் இடமெங்கும் அவருக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினர். அதையெல்லாம் தாண்டி பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகமானது ரஜினி,வாலி உட்பட மொத்த படக்குழுவின் மீதும் வழக்கு போட்டது. அதன் பிறகு களத்தில் இறங்கிய ரஜினி இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

இதையும் படிங்க: இந்த ரகசியம் உங்க அம்மாவுக்கு கூட தெரியக்கூடாது! –  ராதாரவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெயலலிதா…

google news
Continue Reading

More in Cinema History

To Top