ரஜினி, கமல் எல்லாரும் படம் ஓடலைன்னா காசை திருப்பிக் கொடுத்தாங்க... தல என்ன செய்வார் தெரியுமா?..

பெரிய பட்ஜெட் படம். சின்ன பட்ஜெட் படம்னு இல்ல. நல்ல கதைகளம் இருந்தால் அது எந்த பட்ஜெட்டா இருந்தாலும் படம் ஓடும். ஆனால் இன்று ஒரு படம் நல்லா ஓடுவதும் அது ஓடாததும் கணிக்க முடியாததாகி விட்டது. விஷால் என் நண்பர் தான். அவர் நடிச்சதுலயே மிகப்பெரிய ஹிட் மார்க் அண்டனி தான்.

ஆனா அது ஏன் ஓடுனதுன்னு இன்னிக்கும் வரை எனக்குத் தெரியல. எல்லா இயக்குனர்களுமே படம் நல்லா ஓடணும்னு தான் எடுக்கறாங்க. சித்தா படம் நல்ல கதை. ஆனா ஏன் ஓடலைன்னே தெரியல என்கிறார் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர்.

Sridhar

Sridhar

ரஜினி, கமல், விஜய், டி.ராஜேந்தர் என பெரிய நடிகர்கள் எல்லாரும் ஒரு படம் ஓடலைன்னா அதனால திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் என்று தெரிந்ததும் அவர்களைக் கூப்பிட்டு எவ்வளவு நஷ்டமோ அதைத் திருப்பிக் கொடுத்து இருக்காங்க. ஆனால் இதுல ரொம்பவே வித்தியாசமானவர் தல அஜீத். அதனால் தான் அவர் அல்டிமேட் ஸ்டார். அவர் என்ன செய்தாருன்னு இவரே சொல்கிறார் பாருங்கள்.

20 லட்ச ரூபாயைக் கொடுத்து படத்தை எடுத்துத் தியேட்டர்ல போடுவாரு. 6 லட்சம் தான் வசூல்னா கண்டிப்பா அது தியேட்டர்காரங்களுக்கு நஷ்டம் தான். அப்படி படம் ஓடலைன்னா கமல், ரஜினி, விஜய், அஜீத் எல்லாருமே பணம் கொடுத்துருக்காங்க. ரஜினி குசேலன், பாபா படங்களுக்கு கொடுத்தார். கமல் மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்குக் கொடுத்தார். டி.ராஜேந்தர்கிட்ட எல்லாம் போராட வேண்டிய தேவையே இல்ல. அவரே கூப்பிட்டு எவ்வளவுன்னு கொடுத்துருக்காரு.

விவேகம் படம் மிகப்பெரிய நஷ்டம். அந்தப் படத்தோட 2வது நாள்லயே நான் பெரிய இழப்புன்னு பேட்டி கொடுத்தேன். என்னை அஜீத் ரசிகர்கள்லாம் திட்டினாங்க. அந்தப் படத்தோட தயாரிப்பு சத்யஜோதி. டைரக்டர் சிவா. அதே தயாரிப்பு, டைரக்டரை வைத்து மினிமம் பட்ஜெட்ல உடனே விஸ்வாசம் என்ற படத்தைத் துவங்கினாங்க.

இதையும் படிங்க... அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

விவேகத்துல ஏற்பட்ட நஷ்டம் யாருக்கு என்று தெரிந்து அவர்களது இழப்பை இந்தப் படத்தின் மூலமாக சரிசெய்தார்கள். அதன் மூலமாக விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் செய்தார்கள். விஸ்வாசன்ம் படம் மூலம் எல்லோருக்கும் நல்ல லாபம் வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story