கைவிட்ட உறவுகள்.. வாட்டிய தனிமை…தீராத நோய்… ஊரை விட்டே சென்ற ஸ்ரீவித்யா….

Published on: May 6, 2023
srividya
---Advertisement---

தமிழ் சினிமாவில் வசீகரிக்கும் கண்கள், சிரித்த முகம் எனில் எல்லோருக்கும் நியாபகம் வருவது மறைந்த நடிகை ஸ்ரீவித்யா. எம்.எல்.வசந்தகுமாரி என்கிற பாடகிக்கு பிறந்தவர். சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர். எம்.ஜி.ஆர் படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பின் ‘பார்ப்பதற்கு சின்ன பெண்ணாக இருக்கிறார்’ என அந்த வாய்ப்பை இழந்தார். அதன்பின் நூற்றுக்கு நூறு படம் மூலம் பாலச்சந்தர் இவரை அறிமுகம் செய்தார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். திரையுலகில் ரஜினி பேசிய முதல் வசனம் ‘இது பைரவி வீடுதான’. அந்த பைரவியாக நடித்தவர் ஸ்ரீவித்யாதான். ரஜினியின் முதல் கதாநாயகி. ஆனால், கமல் மீது இவருக்கு தீராக்காதல் இருந்தது. ஆனாலும் ஒரு தலைக்காதலாகவே இருந்தது. கமலை விட வயதானவர் என்பதாலும், அந்த சமயம் கமல்ஹாசன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடி வந்ததாலும் ஸ்ரீவித்யாவின் காதலை நாகரீகமாக மறுத்தார். ஆனாலும்,கமலுடன் அபூர்வ சகோதரர்கள், காதலா காதாலா உள்ளிட்ட பல படங்களில் ஸ்ரீவித்யா நடித்தார்.

ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால், ஸ்ரீவித்யா மீது சந்தேகப்பட்டு ஜார்ஜ் அவரை கொடுமைப்படுத்த அவரிடமிருந்து விலகினார். ஸ்ரீவித்யாவின் சொத்துக்க்களை சிலர் அபகரிக்க முயல தன்னந்தனியாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு உறவினர்கள், அவருடன் பழகியவர்கள், அவரிடம் உதவி பெற்றவர்கள் என யாரும் அவருக்கு உதவில்லை. அப்போது அவருக்கு உடன்பிறவா சகோதரர்களாக உதவியது இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நடிகர் செந்தாமரை. மற்றொருவர் இயக்குனர் ஆர்.சி.சக்தி. ‘என்னுடன் பிறக்கவில்லை என்றாலும் அவர்களே என் சகோதரர்கள்; என சொன்னவர் ஸ்ரீவித்யா,

கதாநாயகி, குணச்சித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீவித்யா முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதை சிகிச்சையில் சரி செய்ய முடியாது என தெரியவந்ததும் சென்னையிலிருந்து வெளியேறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இவருக்கு உதவியவரின் வீட்டிலே சில வருடங்கள் தங்கி உயிரை விட்டார். பல வருடங்களாக அவர் யாரையும் பார்க்கவே இல்லை. அவரை பற்றிய தகவலும் யாருக்கும் தெரியவில்லை.

அவர் கடைசியாக சந்திக்க ஆசைப்பட்டது கமலை மட்டுமே. உடல் நோய் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருப்பார் என நினைத்து அவரை பார்க்க திருவனந்தபுரம் போன கமலுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வசீகர முகம் கொண்ட ஸ்ரீவித்யா உடல் உறுக்கி, சுருக்கி படுக்கையில் குறுகி கிடப்பதை பார்த்த கமல் கண்ணீர் விட்டபடியே அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாராம். ஸ்ரீவித்யா கடைசியாக பார்த்த முகம், குரல் கமலுடையது. அந்த சந்திப்பு நடந்து சில நிமிடங்களிலேயே அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

ஸ்ரீவித்யா மறைந்துவிட்டாலும் அந்த பேசும் கண்களும், வசீகர முகமும், குரலும் ரசிகர்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கும்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.