எம்.ஜி.ஆர் – கருணாநிதி – ஜெயலலிதா மூவரும் ஒரே விழாவில்!.. எப்போது நடந்தது தெரியுமா?..

Published on: May 6, 2023
mgr
---Advertisement---

திரையுலகில் உச்ச நடிகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் நடித்து பின் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் பெரிய நடிகராக மாறினார். ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கான் ரசிகர்கள் கூட்டம் எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதனால்தான் அரசியலில் இறங்கியதும் இவர் முதலமைச்சராக மாறினார். தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதேபோல், எம்.ஜி.ஆர் நடிகராக வளர்ந்தபோது கதாசிரியராக, வசனகர்த்தவாக வளர்ந்தவர் கலைஞர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படமான ராஜகுமாரி படத்தில் வசனம் எழுதியது கருணாநிதிதான். அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்த அபிமன்யூ, மந்திரகுமாரி, மருநாட்டு இளவரசி ஆகிய படங்களில் கருணாநிதியே வசனம் எழுதியிருந்தார். தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட கருணாநிதி அண்ணாவின் மறைவுக்கும் தமிழகத்தின் முதல்வராக மாறினார்.

அதேபோல், அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்க துவங்கி அவரின் ஃபேவரிட் கதாநாயகியாக மாறியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர் அதிமுகவை துவங்கி பின் ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை தலைமையேற்று நடத்தி ஜெயலலிதாவும் முதல்வராக மாறினார்.

எம்.ஜி.ஆர் – கருணாநிதி இருவருமே அரசியலில் எதிரிகளாகவே இருந்தனர். அதேபோல், ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் நிரந்தர எதிரிகளாக இருந்தனர். கடைசிவரை கருணாநிதிதியை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் ஜெயலலிதா.

இப்படி அரசியலில் எதிர்எதிர் துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர் – கருணாநிதி – ஜெயலலிதா ஆகிய மூவரும் ஒரே விழாவில் ஒன்றாக கலந்து கொண்டார்கள் என்றால் நம்ப முடிகிறதா?… ஆனால், உண்மையில் அது நடந்தது.

பாடகியாக இருந்து சினிமாவில் நடித்து அப்போதே பல லட்சம் சம்பளம் வாங்கிய கே.பி.சுந்தராம்பாள் கொடுமுடியில் ஒரு புதிய திரையரங்கை கட்டினார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சுந்தராம்பாள் அழைப்பு விடுத்தார். அதேபோல், அப்போது அடிமைப்பெண் படத்தில் நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் அழைப்பு விடுத்தார். மறைந்த முதல்வர்கள் மூவரும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் முதன் முதலில் சந்தித்து கொண்டார்கள் என்றால் அது இந்த விழாவுக்காகத்தான். அதன்பின் ஒரே முறை எம்.ஜி.ஆர்- கருணாநிதி – ஜெயலலிதா- கருணாநிதி ஆகிய நால்வரும் ஒரு விழாவில் சந்தித்து கொண்டனர்.

மொத்தத்தில் எம்.ஜி.ஆர்- கருணாநிதி – ஜெயலலிதா ஆகிய மூவரும் ஒன்றாக கலந்து கொண்டது இருமுறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.