Connect with us

Cinema News

கமலோட என்னால ஆட முடியாது!.. கண்ணீர் விட்ட நடிகை…அப்படி என்ன நடந்துச்சு?

தமிழ் சினிமாவில் உள்ள சிறப்பான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு காலத்தில் கமல்ஹாசன் படம் என்றாலே அதை பார்ப்பதற்கு பெரும் கூட்டம் வந்தது. இப்போதுவரை தமிழ் சினிமாவில் செல்வாக்கு மிக்க நடிகராக கமல்ஹாசன் உள்ளார். போன வருடம் வெளியான விக்ரம் படம் கொடுத்த வெற்றியே அதற்கு ஆதாரமாகும்.

ரஜினிகாந்திற்கு போட்டி நடிகராக இருந்த கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இயக்கம், நடனம், இசை என அனைத்து துறைகளிலும்  தனது திறமையை காட்டியுள்ளார். சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான நடிகராக கமல் அறியப்படுகிறார்.

இதனாலேயே கமல்ஹாசன் திரைப்படத்தில் வேறு நடிகர்கள் நடிக்கும்போது கொஞ்சம் பயந்தப்படியே நடிப்பதுண்டு. ஏனெனில் கமல்ஹாசன் நடிப்பிற்கு ஈடுக்கொடுப்பது கொஞ்சம் கடினமான காரியமாகும். இந்த நிலையில் நடிகை ரேவதிக்கு கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ரேவதிக்கு வந்த கஷ்டம்:

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புன்னகை மன்னன் திரைப்படத்தில் இவர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். படத்தில் க்ளாசிக்கல் டான்ஸ் ஆடுபவராக கமல்ஹாசன் இருப்பார். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள ரேவதி வருவார்.

ரேவதிக்கு உண்மையில் பரதநாட்டியம் மட்டுமே தெரியும். எனவே அவருக்கு க்ளாசிக்கல் மற்றும் மாடர்ன் நடனங்கள் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அவை மிகவும் கடினமாக இருந்ததால் ரேவதிக்கு சிரமமாக இருந்தது. இதனால் வெறுப்பான ரேவதி ஒரு அளவிற்க்கு மேல் அழ துவங்கிவிட்டார். நான் இந்த படத்திலேயே நடிக்கவில்லை என்னை விட்டு விடுங்கள் என கூறியுள்ளார்.

பிறகு அவரை சமாதானப்படுத்திய பாலச்சந்தர் ஒரு வழியாக அவரை ஆட வைத்துள்ளார். இந்த நிகழ்வை ரேவதியே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: உங்களுக்கு இன்னைக்கு கல்யாணம் கிடையாது- மாப்பிள்ளை கோலத்தில் ஓடிவந்த கார்த்திக்கை ஏமாற்றிய சுந்தர் சி…

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top