பிரபுவால் மசாலா படத்தை இயக்க கிளம்பிய பாலு மகேந்திரா… இப்படி எல்லாம் நடந்திருக்கா?

Published on: May 20, 2023
Prabhu and Balu Mahendra
---Advertisement---

பாலு மகேந்திரா இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் கலைப்படைப்புகள் என்று கூறப்படும் பாணியை சேர்ந்தவை. ஆனால் அவர் அவ்வப்போது கம்மெர்சியல் திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் “நீங்கள் கேட்டவை”.

Neengal Kettavai
Neengal Kettavai

இத்திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் தியாகராஜன், பானுசந்தர், சில்க் ஸ்மிதா அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இப்போதும் ரசிக்கப்படுகிறது. “அடியே மனம் நில்லுனா நிக்காதடி” என்ற பாடலை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த நிலையில் இத்திரைப்படம் உருவாக காரணமாக இருந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Prabhu
Prabhu

சிவாஜி கணேசன், பிரபு ஆகியோரின் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு “வெள்ளை ரோஜா” என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் பிரபு நடித்துக்கொண்டிருந்தபோதே பாலு மகேந்திரா இயக்கும் ஒரு புதிய படத்தில் பிரபு ஒப்பந்தமானார். இதில் பிரபுவுக்கு ஜோடியாக ராதா ஒப்பந்தமானார். அப்போது பாலு மகேந்திரா, “இந்த திரைப்படத்தை எடுக்க எனக்கு தொடர்ச்சியாக முப்பது நாட்கள் கால்ஷீட் வேண்டும்” என கேட்டிருந்தார். அதற்கு பிரபுவும் ஒப்புக்கொள்ள இத்திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் “வெள்ளை ரோஜா” திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிரபுவுக்கு ஒரே சமயத்தில் பல பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே படத்துக்கு தொடர்ந்து 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் நம்மால் மற்ற திரைப்படங்களில் நடிக்க முடியாதே என்று எண்ணிய பிரபு, பாலு மகேந்திரா புராஜெக்டில் இருந்து விலகினார்.

Balu Mahendra
Balu Mahendra

அதன் பிறகுதான் தியாகராஜன், சில்க் ஸ்மிதா, பானுசந்தர், அர்ச்சனா ஆகியோரை வைத்து “நீங்கள் கேட்டவை” என்ற கம்மெர்சியல் திரைப்படத்தை இயக்க முடிவு செய்தாராம் பாலு மகேந்திரா.

இதையும் படிங்க: நீ தரலாம் கோடி!.. வரமாட்டான் இந்த தாடி – ஒரு கோடி கொடுத்தாலும் அத மட்டும் செய்யமாட்டாராம் டி.ஆர்

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.