அட சண்டாளா!. எமோஷனலாகி கமலிடம் அவரையே திட்டிய இளவரசு!.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்…

Published on: May 20, 2023
kamal
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் இளவரசு. பாரதிராஜாவால் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிது’ என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார் இளவரசு. இந்தப் படத்தை இயக்கியவர் பாரதிராஜா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இளவரசு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.

ilavarasu

கிராமத்து மண்வாசனையுடன் பேசும் இவரின் வசனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவர் மிகச் சிறந்த நடிகர் என்பதை ‘முத்துக்கு முத்தாக’ படம் உணர்த்தியது. அதில் ஐந்து பிள்ளைகளுக்கு அப்பாவாக தன் கதாபாத்திரத்தை மெருகேற்றியிருப்பார் இளவரசு.

நடிகராவதற்கு முன் இவர் ஒளிப்பதிவாளராக இருந்தார். பிரபுவின் நடிப்பில் வெளிவந்த ‘பாஞ்சாலக்குறிச்சி’ மற்றும் ‘பெரியதம்பி’, விஜயின் நடிப்பில் சூப்பர் ஹிட் படமான ‘ நினைத்தேன் வந்தாய்’, ‘இனியவளே’, ‘வீரநடை’, ‘மனம் விரும்புதே உன்னை’ போன்ற படஙகள் எல்லாம் இளவரசு ஒளிப்பதிவில் வெளிவந்த படங்களாகும். கமல் நடித்து வெளியான பாபநாசம் படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

ilavarasu

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் அப்படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட இளவரசு ‘ஒரு கதாபாத்திரத்தை கமல்தான் கொலை செய்துள்ளார் என நினைக்கும் கலாபாவன் மணி என்னிடம் அதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார். அப்போது கமல் எங்களின் முன்னே நடந்து போவார். பின்னால் திரும்பி பார்க்க கூடாது. ஆனால், நம்மை பற்றித்தான் பேசுகிறார்கள் என்பதை உடல் மொழியில் காட்ட வேண்டும்.

kamal
kamal

அதேநேரம், எதுவும் செய்யாதது போல் இயல்பாக நடக்க வேண்டும். இத்தனை நுணுக்கங்கள் அந்த காட்சியில் இருக்கும். அவர் நடித்து முடித்ததும் அவர் எப்படி நடித்தார் என்பதை மானிட்டரில் சென்று பார்த்து அசந்து போனேன். ‘சண்டாளன் சார் நீங்க’ என சொல்லிவிட்டேன். பின் ஐயோ அவரிடமே இப்படி சொல்லிவிட்டோமே என நினைத்து அவரிடம் தயங்கினேன். அவரோ சிரித்துக்கொண்டே தோளில் தட்டிவிட்டு சென்றுவிட்டார்’ என இளவரசு பேசியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.