
Cinema News
எனக்கும் விஜய்க்கும் சண்டை வர்றதுக்கு இதுதான் காரணம்… மனம் திறந்த எஸ்.ஏ.சி!..
Published on
By
தமிழ் சினிமாவில் விஜய் எனும் பெரும் நடிகரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தங்களது வாரிசுகளை சினிமாவில் கதாநாயகனாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்துள்ளனர்.
கார்த்திக்,பிரபு, தியாகராஜன் மாதிரியான நடிகர்கள் அவர்களது பிள்ளைகளை வேறு இயக்குனர்களின் படங்கள் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற சில இயக்குனர்கள் அவர்களது இயக்கத்திலேயே அவர்களது பிள்ளைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினர். அப்படியாக நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜய்.
SA Chandrasekhar
ஆனால் நாளைய தீர்ப்பு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை அப்பொழுது விஜயகாந்தை வைத்து அதிகமான படங்களை இயக்கியிருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர். எனவே நடிகர் விஜயகாந்துடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது.
தனது மகனை விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்தால் கொஞ்சம் வரவேற்பு இருக்கும் என நினைத்தார் சந்திரசேகர். விஜயகாந்திடம் சென்று தனது மகனோடு சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்படியாக உருவானதுதான் விஜய் நடிப்பில் இரண்டாம் படமாக வெளிவந்த செந்தூரபாண்டி.
senthoorapandi
செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்திற்கு சமமான கதாபாத்திரத்தை விஜய்க்கு அளித்து அந்த படத்தை எடுத்திருந்தார் எஸ்.ஏ சந்திரசேகர் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி விஜய்யின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஏ சந்திரசேகர்.
இருவருக்கும் சண்டை:
ஆனால் கடந்த சில காலங்களாக நடிகர் விஜய்க்கும், எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே அதிக பிரச்சனைகள் சண்டைகள் ஏற்பட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் சிறு வயது முதலே விஜய் எப்படி நடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என அனைத்து விஷயங்களுக்கும் நான்தான் ஆலோசனை கொடுப்பேன். ஆனால் அவர் திருமணம் ஆன பிறகு ஒரு வளர்ந்த மனிதராக சுயமாக அவருக்கான முடிவுகளை எடுக்க நினைத்தார். அப்பொழுதும் நான் ஒரு தந்தை என்பதால் அவருக்கான பல முடிவுகளில் உள்ளே புகுந்து அவற்றை மாற்றுவது குறித்து பேசினேன்.
இவ்வாறு பலமுறை நடக்கும் பொழுது எங்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டது. சொல்ல போனால் முழுக்க முழுக்க விஜய்க்கும் எனக்கும் நடக்கும் சண்டைக்கு காரணமே நான்தான் என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார் ஆனால் ஒரு தந்தையாக அவருக்கு ஆலோசனை கூறாமல் என்னாலும் இருக்க முடியாது அவருடைய நல்லதுக்காகதான் நான் அதை கூறுகிறேன் என எஸ்.ஏ சந்திரசேகர் கூறியிருந்தார்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...