தமிழ் சினிமாவின் ஆச்சி என்றாலே நாம் நினைவுக்கு வருவது மனோரமா மட்டும்தான். கிட்டத்தட்ட பல தலைமுறைகளாக நடித்து வந்த ஒரு பழம்பெரும் நடிகையாகவே மனோரமா திகழ்ந்து வந்தார். சிவாஜி எம்ஜிஆர் தொடங்கி ரஜினி கமல் விஜய் அஜித் என இளம் தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமைக்குரியவர் மனோரமா. ஒரு நாளில் தொடர்ந்து ஏழு கால்ஷீட் கொடுத்து மிகவும் பிசியாக நடித்த ஒரு நல்ல கலைஞராக இருந்திருக்கிறார் மனோரமா.
சிவாஜி எம்ஜிஆர் மனோரமாவிற்காக காத்துக் கிடந்த காலங்களும் உண்டு. ரஜினி கமல் இவர்களுடன் கமலுக்கு மிகவும் பிடித்த கலைஞராக மனோரமா இருந்திருக்கிறார். மனோரமாவிற்கும் கமல் என்றால் மிகவும் பிடிக்குமாம். ஏனெனில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து சிறு குழந்தையாக பார்த்த ஒரு பையன் வளர்ந்து இந்த அளவுக்கு ஒரு உச்சத்தை அடைந்திருக்கிறார் என்றால் கமலை பார்த்து மிகவும் பெருமை பட்டவர்களில் மனோரமா குறிப்பிடத்தக்கவர்.

அது மட்டும் இல்லாமல் கமலுடன் ஏகப்பட்ட படங்களில் மனோரமா நடித்து இருந்தாலும் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னால் முடியும் தம்பி என்ற படம் கமலுக்கு மிகவும் நெருக்கமான படமாக அமைந்தது. அந்தப் படத்தில் கமலுக்கு அண்ணியாக நடித்திருப்பார் மனோரமா. கமலின் வாழ்க்கையில் அவரது அம்மா இறந்த பிறகு அவரது அண்ணி தான் அம்மாவாக இருந்து கமலை பார்த்து வந்திருக்கிறார் . அதுமட்டுமில்லாமல் கமல் ஒரு மூன்று பேரின் மரணத்தில் தான் அழுதாராம். ஒன்று அவரது அம்மா, இன்னொருவர் அவரது அண்ணி, மூன்றாவதாக நடிகரி ஸ்ரீவித்யாவாம். அதனால் தான் இந்த படத்தில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்த மனோரமாவை தன் சொந்த அண்ணியாகவே பாவித்தாராம் கமல்.
இந்தப் படத்தில் நடிக்கும் போது கூட மனோரமா, கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கமலுக்கும் மனோராமாவிற்கு ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததை பார்த்து அனைவரும் வியந்திருக்கிறார்கள் .சில நேரங்களில் சென்டிமென்ட் ஓவர் ஆகில் அழவும் செய்தாராம் கமல். இதை பார்த்த கே.பாலச்சந்தர் மற்ற ஊழியர்களிடம் கமலுக்கு அவர் அண்ணி ஞாபகம் வந்துவிட்டது போல .அதனால் தான் இந்த அளவுக்கு எமோஷன் ஆகிவிட்டார் என்று கூறினாராம்.

இதிலிருந்தே கமலுக்கும் மனோரமாவிற்கும் இருக்கும் நெருக்கம் அதிகமாகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் முதலில் மனோரமா கதாபாத்திரத்திற்கு கமிட் ஆனவர் காந்திமதியாம். அந்தப் படத்தில் ராஜா கைய வச்சா என்ற பாடலில் முதலில் மனோரமாவின் குரல் வரும். அதனால் காந்திமதி நடித்தால் நன்றாக இருக்காது என்பதற்காக மனோரமாவை இந்த படத்திற்குள் நுழைத்திருக்கிறார் கமல். இந்த சுவாரஸ்ய செய்தியை மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : அதிக சம்பளம் கேட்ட நடிகை; சரோஜாதேவிக்கு அடித்த லக்: அதிர்ஷ்டம் புகுந்து விளையாடிருக்கே!
