சிவாஜி எப்பவோ செத்துட்டான்டா!. எஸ்.பி.பி-யிடம் புலம்பிய நடிகர் திலகம்

Published On: May 26, 2023
spb
---Advertisement---

திரையுலகில் நடிப்பின் சிகரமாக கருதப்பட்டவர் நடிகர் சிவாஜி. நடிகர் திலகம் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரர். அவரின் போட்டி நடிகரான எம்.ஜி.ஆரே அவரை சிறந்த நடிகர் என பலமுறை பாராட்டியுள்ளார். நாடகங்களில் நடிக்க துவங்கி பின் சினிமாவுக்குள் நுழைந்தவர். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்.

sivaji
sivaji

சிவாஜியை எல்லோருக்கும் ஒரு சிறப்பான நடிகராக மட்டுமே தெரியும். ஆனால், அவர் கூட்டு குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் ஒருவர். எப்போதும், சொந்த பந்தங்களுடன் ஒன்றாக வசிக்க ஆசைப்பட்டவர். அவரின் குடும்பமும் உறவினர்களும்தான் அவருக்கு உலகம் என்பது அவருடன் நெருங்கிய பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். வீடு விட்டால் படப்பிடிப்பு, படப்பிடிப்பிலிருந்து நேராக வீடு. நடிப்பு, குடும்பம் இது இரண்டையும் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது.

sivaji

அவருக்கு என்ன சம்பளம், என்ன ஒப்பந்தம் எதையும் அவர் கவனிக்க மாட்டார். அது எல்லாவற்றையும் அவரின் சகோதரர் சண்முகமே பார்த்துக்கொள்வார். சிவாஜி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்துகொண்ட மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘ சிவாஜிக்கு எல்லாமே சண்முகம்தான். அவர் எங்கு கையெழுத்து போட சொல்கிறாரோ அங்கு சிவாஜி கையெழுத்து போடுவார்.

sivaji

அவருக்கு என்ன சம்பளம், எத்தனை நாள் கால்ஷீட் என எல்லாவற்றையும் சண்முகமே கவனிப்பார். அவர் இல்லையெனில் சிவாஜியே இல்லை. அவர் இறந்த சில நாளில் நான் சிவாஜியை பார்க்க போனேன். என்னிடம் அவர் ‘சிவாஜி எங்கடா இருக்கான்.. அவன் எப்பவோ செத்துட்டாண்டா. சண்முகம் இல்லாம நான் இல்ல. ஏதோ நடை பிணமா வாழ்ந்துட்டு இருக்கேன்’ என சொன்னாராம்.

சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டில் எப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனேயே அவர் மதிய விருந்து சாப்பிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.