Connect with us

Cinema News

அந்த ரெண்டு படமும் ஓடியிருக்க கூடாது!.. நல்ல சினிமா எப்படி வரும்?.. ஆதங்கப்பட்ட கமல்!..

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் சிவாஜிக்கு பிறகு முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். தொடர்ந்து சண்டை காட்சிகளை கொண்ட கமர்சியல் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.

அதுவும் தமிழ் சினிமாவில் எந்த ஒரு பிரபல நாயகர்களும் நடிக்க ஒப்புக்கொள்ளாத கதாபாத்திரங்களில் கூட கமல்ஹாசன் நடித்துள்ளார்.உதாரணத்திற்கு 16 வயதினிலே திரைப்படத்தில் வரும் சப்பானி கதாபாத்திரத்தை சொல்லலாம்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை கமல்ஹாசனுக்கு இருந்து வந்தது. அவரது சொந்த தயாரிப்பில் எடுத்த பல படங்களில் அதை முயற்சியும் செய்துள்ளார்.

கருத்து தெரிவித்த கமல்:

கதாநாயகிகளை மட்டும் வைத்து பெரிதாக படங்கள் வராத காலகட்டத்தில் கமல்ஹாசன் அவரது தயாரிப்பில் மகளிர் மட்டும் என்கிற திரைப்படத்தை தயாரித்தார். இப்படி தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவில் கொண்டு வர பல முயற்சிகள் எடுத்தாலும் தொடர்ந்து அவரது திரைப்படங்களிலேயே கமர்சியல் திரைப்படங்கள்தான் பெரும் வெற்றியை கொடுத்தன.

தற்சமயம் வெளியான விக்ரம் படம் கூட அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த ஒரு கமர்சியல் படமாகும்.ஒருமுறை கமல்ஹாசனுடன் பணிபுரிந்த சக நடிகர் ஒருவர் அவரிடம் கேட்கும் பொழுது ஏன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களே வெற்றியடைந்து வருகின்றன.

நல்ல படங்களுக்கு மதிப்பில்லாமல் இருக்கிறது என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் நான் நடித்த சகலகலா வல்லவன், போக்கிரி ராஜா போன்ற திரைப்படங்கள் ஓடி இருக்க கூடாது. அந்த மாதிரியான திரைப்படங்கள் வெற்றியடையும் பொழுது நல்ல திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் இருக்காது என கமலே கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிவாஜி எப்பவோ செத்துட்டான்டா!. எஸ்.பி.பி-யிடம் புலம்பிய நடிகர் திலகம்

Continue Reading

More in Cinema News

To Top