ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகருக்கு ஏற்பட்ட நிலை!. கடுப்பாகி திரையரங்கை நொறுக்கிய ரசிகர்கள்..

Published on: May 30, 2023
rajini
---Advertisement---

சினிமாவை பொறுத்தவரை அதில் எல்லா காலத்திலும் போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் சினிமாவில் கதாநாயகர்களுக்கிடையே உள்ள போட்டியானது எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தில்தான் துவங்கியதாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு போட்டி நடிகர்களாக இருந்தவர்கள் ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும்தான்… ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் பெரும் நடிகர்களாக இருந்தபோது அவர்களுக்கு அச்சுறுத்தலாக பல நடிகர்கள் சினிமாவிற்கு வந்தனர். விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுக்கும் கதாநாயகர்களாக இருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் ஒரு புது முகத்தை பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். பாரதிராஜா எப்போதும் ரிஸ்க் எடுப்பதை பற்றி கவலைப்பட்டதே கிடையாது.  அதனால் தைரியமாக புது முகத்தை அறிமுகப்படுத்திவிடுவார்.

இந்த நிலையில்தான் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் என்கிற திரைப்படத்திற்காக ஆள் தேடி கொண்டிருந்தார். அப்போது ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த நடிகர் சுதாகர் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி கொண்டிருந்தார்.

அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என நினைத்த பாரதிராஜா அவரை அந்த படத்தில் கதாநாயகனாக இறக்கினார். அந்த படம் பெரும் ஹிட் கொடுத்தது. அந்த சமயத்தில் ரஜினி கமல் போன்ற நடிகர்களே தங்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் வந்துவிட்டார் என பயந்தனர்.

ஆனால் சுதாகர் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. அதிலும் 1980 இல் அவர் நடித்து வெளியான தை பொங்கல் திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. சென்னையில் ஒரு திரையரங்கில் அந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கை அடித்து நொறுக்கிவிட்டு சென்ற  சம்பவம் நடந்துள்ளது.

பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்!..

இதையும் படிங்க: இத்தன வருஷம் தாண்டியும் பேசுவாங்கன்னு அப்ப தெரியல!.. பாட்ஷா அனுபவம் பகிரும் கிட்டி…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.