தமிழ் சினிமாவில் செந்தில் என்ற பெயரை கேட்டாலே நம்மை அறியாமலேயே சிரித்து விடுவோம். அவர் இப்பொழுது இந்த அளவு வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னாடி கவுண்டமணியிடம் எத்தனை முறை அடி வாங்கியிருப்பார் என்று யோசித்து பாருங்க. அதனாலேயே மக்கள் செந்திலை ரசிக்க ஆரம்பித்தனர்.
திருப்புமுனையாக அமைந்தது
செந்தில் நடித்த முதல் படம் பசி. அந்த படத்தில் அவருக்கு சிறு கதாபாத்திரம் தான். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் தலைக்காட்ட ஆரம்பித்தார். பாக்கியராஜ் தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் ஒரு வேலையாளாக நடித்திருப்பார். அந்தப் படம் தான் செந்திலின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையில் ஏற்படுத்தியது.

இப்படி கிடைக்கிற கதாபாத்திரங்களில் நடித்து வந்த செந்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக விடாமுயற்சியுடன் முயற்சி செய்து கொண்டே இருந்தார். அந்த உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தான் சினிமாவில் ஒரு பெரிய இடத்திற்கு அவரால் வர முடிந்தது.
முகபாவனையால் ரசிக்க வைத்தவர்
செந்திலை பார்க்கும்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனே சிரித்து விடுவார்கள். அதற்கு காரணம் அவருடைய குழந்தைத்தனமான முகம் தான். தன் முக பாவனைகளை வைத்துக் கொண்டே தன்னுடைய நகைச்சுவைகளை ரசிகர்களுக்காக தெறிக்க விட்டவர் .அந்த முகத்திலேயே அவர் செய்யும் சேட்டைகள் வசனங்கள் எல்லாமே வெளிப்படும்.

செந்தில் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகர் கவுண்டமணி .கவுண்டமணியோடு அவர் அடிக்கும் லூட்டிகளை எந்த நேரத்தில் பார்த்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைத்து விடும் .இவர்களின் காமெடிக்காகவே ஏராளமான படங்கள் வெற்றி அடைந்ததும் உண்டு. இவர்களுடைய கூட்டணிக்கு ஈடாக எந்த ஒரு நடிகரும் வர முடியாது .அந்த அளவிற்கு இவர்கள் நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க :இயக்குனர் எவ்வளவு சொல்லியும் சரியாக நடிக்க மறுத்த கமல்!.. இதுதான் காரணமாம்…
இந்த நிலையில் நடிகர் செந்தில் ஒரு பேட்டியில் எங்களுடைய காமெடி இந்த அளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் நகைச்சுவையை அவ்வப்போது திருடி தான் நாங்கள் படங்களில் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல நாகேஷ் அவர்களின் காமெடிகளையும் சில சமயங்களில் வெளிப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். காமெடியைப் பொறுத்த வரைக்கும் ஒரு நடிகரிடம் இருந்து மாறி மாறி வெளிப்படுத்துவது தான் நகைச்சுவை என்று செந்தில் கூறினார்.
