விஜய்யும் உதயநிதியும் ஒரு காலகட்டத்தில் மிக நெருக்கமாக இருந்து வந்தனர். சொல்லப்போனால் உதயநிதி தயாரித்த முதல் திரைப்படம் விஜய்யின் “குருவி” திரைப்படமே. எனினும் ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது.

உதயநிதிக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட விரிசல்
இதனை உறுதிபடுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் “விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது. ஆனால் நடுவில் சில வேண்டாத நபர்கள் என்னை பற்றி தவறாக அவரிடம் சொல்லி இருவருக்குள் இருந்த நட்பில் விரிசலை ஏற்படுத்தினர். ஆனால் நாங்கள் அந்த பிரச்சனையை நேரில் சந்தித்து உட்கார்ந்து பேசிமுடித்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு இடையே எழுந்த பிரச்சனை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

முட்டுக்கட்டை போட்ட உதயநிதி
அதாவது “மாஸ்டர்” திரைப்படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி விஜய்க்கு மூன்று கதைகளை கூறினாராம். அந்த மூன்று கதைகளும் விஜய்க்கு பிடித்துப்போக “இதில் எதாவது ஒரு கதையை நீங்களே தேர்ந்தெடுங்கள். நான் நிச்சயம் நடிக்கிறேன்” என கூறினாராம்.
ஆனால் இந்த சமயத்தில் மகிழ் திருமேனி உதயநிதி ஸ்டாலினின் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் பாதி காட்சிகளை படமாக்கி இருந்தாராம். நடுவில் பல நாட்கள் ஷூட்டிங் நடக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில்தான் விஜய்க்கு கதை கூறியிருக்கிறார் மகிழ் திருமேனி.

விஜய் ஓகே சொன்னதும் மகிழ் திருமேனி நேராக உதயநிதியிடம் சென்று “விஜய்க்கு ஒரு படம் பண்ணிவிட்டு அதன் பின் கலகத்தலைவன் படத்தை தொடர்கிறேன்” என கூறினாராம். ஆனால் அதற்கு உதயநிதி முட்டுக்கட்டையை போட்டுவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 30 வருஷமா என்னால பண்ண முடியல.. ஒரு போண்டாவுக்காக ஏங்கி போன கமல்ஹாசன்…
