Connect with us

Cinema History

30 வருஷமா என்னால பண்ண முடியல.. ஒரு போண்டாவுக்காக ஏங்கி போன கமல்ஹாசன்…

பிரபலமானாலே ப்ராபளம்தான் என சில நகைச்சுவைகளில் கேள்விப்பட்டிருப்போம். தமிழ் சினிமா நடிகர்களும் இயக்குனர்களும் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது பலரும் அறிந்த விஷயமே. ஒரு கோடி ரூபாய் என்பது பாமர மக்களுக்கு பெரிய தொகையாகும். அவர்களின் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும் கூட அவர்களால் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க முடியாது.

எனவே பொதுவாக திரைப்பிரபலங்களின் வாழ்க்கை என்பது பொது மக்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கையை பெறுவதற்காக அவர்கள் சில விஷயங்களை இழக்க வேண்டி இருக்கிறது.

பொது ஜனங்களை போல அவர்களால் சாலைக்கோ அல்லது ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கோ இயல்பாக சென்று வர முடியாது. ஆரம்பக்கட்டத்தில் இதனால் ரஜினிகாந்த் கூட அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானார். நடிகர் குரு சோமசுந்தரம் மட்டும் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொண்டவர் என கூறலாம்.

குரு சோமசுந்தரத்திற்கு நடந்த நிகழ்வு:

ஒரு பேட்டியில் அவர் கூறும்போது இதற்காக தனது கெட்டப்பை அடிக்கடி மாற்றிக்கொள்வதாக கூறுகிறார். இதனால் இயல்பாக அவர் சென்னையில் சுற்ற முடிகிறது. ஒருமுறை தூங்காவனம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது கமலை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் குரு சோமசுந்தரம்.

அப்போது பேசி கொண்டிருக்கும்போதே வெளியில் கிளம்பியுள்ளார் குரு சோமசுந்தரம். அதை பார்த்த கமல்ஹாசன் எங்கு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு குரு சோமசுந்தரம் ஐயா பக்கத்து தெருவில் போண்டா நல்லாயிருக்கும். நாங்க போய் சாப்பிட்டுட்டு வந்துடுறோம் என கூறியுள்ளார்.

உடனே கமல் வருத்தமாக 30 வருடமாக ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கேன். என்னால போய் போண்டா சாப்பிட முடியலை. நீங்க மட்டும் போறீங்களா என கேட்டுள்ளார். இதை குரு சோம சுந்தரமே அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அந்தப் படத்தில் நடந்தது என்ன? ரஜினிக்கும் கேப்டனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்

google news
Continue Reading

More in Cinema History

To Top