சத்யராஜ் ரகசிய தொடர்பில் இருந்த நடிகைகள்! பகிரங்கமாக கூறிய பயில்வான் ரெங்கநாதன்

Published on: June 8, 2023
sathya
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக 80கள் காலகட்டத்தில் வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் தயாரிப்பு பணியில் உதவியாளராக இருந்து அதன் பிறகு தான் நடிகராக மாறினார். பள்ளிக்கால நண்பர்கள் ஆன மணிவண்ணனும் சத்யராஜும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கின்றனர் .அது மட்டும் இல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும்பாலான படங்களில் சத்யராஜும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

sathya1
sathya1

எம்ஜிஆர் பித்தன்

எம்ஜிஆரின் தீவிர ரசிகன் என்று சொல்வதை விட எம்ஜிஆர் மீது பித்து பிடித்தவன் சத்யராஜ் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது வெறிகொண்டு இருந்தவர் தான் சத்யராஜ். அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆரின் ஞாபகமாக அவர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாக கேட்டு வாங்கியவர் சத்யராஜ்.

sathya2
sathya2

பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்தார். தந்தை பெரியாரின் திரைப்படத்தில் நடிப்பதற்காக ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அதனால் பெரியார் மீது அன்பு கொண்டிருந்த பல சத்யராஜிற்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்தனர். அது மட்டும் இல்லாமல் திராவிட கழகத் தலைவர் ஆன வீரமணி பெரியார் மோதிரத்தை சத்யராஜிற்கு பரிசாக கொடுத்தார்.

சூப்பர் ஹிட் படங்கள்

அவருடைய சினிமா கரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு ,ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற பல படங்களை சொல்லலாம். இப்படி திரைத்துறையில் ஒரு மதிப்பு மிக்க நடிகராக இருந்த சத்யராஜை பற்றி அண்மையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டையும் கூறியுள்ளார்.

sathya3
பயில்வான்

அதாவது சத்யராஜ் அன்றிலிருந்து இன்று வரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத நடிகராக இருந்து வந்தார் என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் பாடி டிமாண்ட் என்ற ஒரு விஷயத்திற்காக மட்டும் பல கதாநாயகிகளுடன் உறவில் இருந்தார் என்று கூறியிருக்கிறார். ஆனால் அது அவருடைய சொந்த விஷயம். அதை பற்றி நாம் கூறக்கூடாது என்று சொன்னதோடு அந்த கதாநாயகிகளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் சம்மதத்துடனே சத்யராஜ் உறவில் இருந்தார் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நல்லா ஆபாசமா நடிங்க; பாடாய்படுத்திய இயக்குனரால் கடுப்பான ரம்யா கிருஷ்ணன்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.