ப்ளீஸ் எனக்காக இதை பண்ணுங்க!.. மக்களிடம் கோரிக்கை வைத்த எஸ்.ஜே சூர்யா..

Published On: June 14, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய ஹீரோவை வைத்து ஹிட் கொடுத்து சினிமாவிற்குள் வந்தவர் எஸ்.ஜே சூர்யா. அதுவரை காதல் நாயகனாக இருந்து வந்த அஜித்தை வில்லனாக மாற்றி வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா.

அதன் வெற்றியை தொடர்ந்து பல படங்களை இயக்க துவங்கினார். விஜய்யை வைத்து குஷி திரைப்படத்தை இயக்கினார். ஆனால் சினிமாவிற்கு வரும்போதே கதாநாயகன் ஆக வேண்டும் என்கிற ஆசை எஸ்.ஜே சூர்யாவிற்கு இருந்தது.

எனவே அடுத்து அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே நடிக்க துவங்கினார். அதற்கும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அவரது திரைப்படங்களில் அதிகமாக டபுள் மீனிங் காமெடி காட்சிகள் இருந்ததால் அது பொது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது.

பிறகு பட வாய்ப்புகளை இழக்க துவங்கினார் எஸ்.ஜே சூர்யா. மீண்டும் ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற எஸ்.ஜே சூர்யா தற்சமயம் பொம்மை என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.ஜே சூர்யா வைத்த கோரிக்கை:

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படம் ஹாரர் மற்றும் அதே சமயம் காதல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குகிறார். வருகிற ஜூன் 16 இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.

sj suryah
sj suryah

எஸ்.ஜே சூர்யா இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். பேட்டியில் கூறும்போது ”இந்த படம் நல்ல வெற்றியை தரும். ஆனால் அதே சமயம் நான் பொது மக்களிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர் 10 பேரிடம் இந்த படத்தை பார்க்குமாறு வலியுறுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா.

ஒரு காலத்தில் விஜய், அஜித்தை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனருக்கு இந்த நிலையா? என நெட்டிசன்கள் இதுக்குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய், விஜயகாந்தை வைத்து நடந்த பட்டிமன்றம்! தளபதிக்காக எஸ்.ஏ.சி பார்த்த வேலை.. ஜெயிச்சது யாரு தெரியுமா?